வரலாற்று சரிவை கண்ட இந்திய ரூபாய் மதிப்பு
புதுடில்லி : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 78.29 ரூபாயாக நேற்று சரிவைக் கண்டது. உலக சந்தையில் டாலர் வலுப்பெற்று வருவதை அடுத்து, இத்தகைய சரிவு ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. இதனால் டாலர் வலுப்பெற்று வருகிறது.மேலும், அமெரிக்க வட்டிவிகிதம் அதிகரிக்கும் என்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளிலிருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இம்மாதத்தில் இதுவரை, கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய முதலீடுகள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன.இதன் காரணமாக, ரூபாய் வலுவிழந்து வருகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பும், ரூபாய் லாபமடைவதை பாதித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 78.45 ரூபாய் எனும் அளவுக்கு சரியலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வாசகர் கருத்து (33)
இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் நமக்கு ஆதாயமே நம் இளைஞர்கள் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு அனுப்பினால் ஆதாயமே பங்குச் சந்தை வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று தப்புக் கணக்கு போடுபவருக்கு இது ஒரு பாடம் நிலையான முதலீடு என்றால் தொழிற்சாலை இயந்திரங்கள் என்றெல்லாம் கண்ணுக்குத் தெரியும்படி முதலீடு செய்தால் அத்தனை எளிதாக முதலீடு நம் நாட்டை விட்டுப் போகாதே இப்படி நல்லதையே ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது
,,,,
GST ல மட்டுமே சோறுபோடும்னு நினைக்கிற அறிவிலிகள் ஆளும் ஒன்றிய கூட்டம்.
நமது அதிகளவு வெளிநாட்டு இறக்குமதி கச்சா எண்ணை மற்றும் தங்கம் சார்ந்ததாக இருக்கிறது.. அனால் நாம் இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்தவிலையில் இந்திய ரூபாயில் கச்சா எண்ணை வாங்குவதால் குறைந்த அளவு தாக்கமே இருக்கும்.. மேலும் உலகளவில் அமெரிக்க டாலர்கள் மதிப்பு உயர ஆரம்பித்திருப்பதால், ஐரோப்பிய சந்தையில் நாமும் ஈரோவில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்திள்ளோம் .. நமது அமெரிக்க டாலருக்கான இழப்பு சீன பொருட்களின் இறக்குமதியில் மட்டுமே அதிகம் தாக்கம் கொடுக்கும்..
....