பாலியல் கொடுமைக்கு ஆளான இளம்பெண் மீட்பு: கோவை கலெக்டர் அதிரடி

கோவை மாவட்டம், பச்சாபாளையம் - தீத்திபாளையம் செல்லும் ரோட்டில், ரங்காநகரில் ஒரு சிறிய பாழடைந்த கட்டடத்தில், மாற்றுத்திறனாளியான 29 வயது இளம்பெண்ணும், அவரது 54 வயது தந்தையும் வசித்து வந்தனர்.திருமணமாகாத அந்த இளம்பெண், பல நாட்களாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து நமது நாளிதழில் (கோவை நகர்- இணைப்பில்) நேற்று செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, கோவை கலெக்டர் சமீரன் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்க அதிரடி நடவடிக்கை எடுத்தார். மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி கொடுத்த புகாரின் பேரில், பேரூர் போலீசார், இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சட்டம் 2016 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் விசாரணை
ஏற்கனவே தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று நமது நாளிதழில் செய்தி வெளியான உடன், சுறுசுறுப்பாக அடுத்தடுத்து நடவடிக்கைகளை துவக்கினர்.நேற்று நடந்த சம்பவங்கள்:* பாதிக்கப்பட்ட பெண் வசித்து வரும் இடத்துக்கு காலை, 9:41 மணிக்கு, பெண் எஸ்.எஸ்.ஐ., ஒருவர் நேரில் வந்து, அப்பெண்ணிடம், 5 நிமிடம் விசாரித்துவிட்டு சென்றார்.* காலை 11:26 மணிக்கு பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு நேரில் வந்தார். எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கிரைம் மீட்டிங்கில் கலந்து கொண்டு வந்ததாக தெரிவித்தார்.* 11:41 மணிக்கு, பேரூர் டி.எஸ்.பி., திருமால் மற்றும் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு வந்தனர். இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.*பகல், 12:07 மணிக்கு, மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் ஒருமைப்பாடுத்துறை அலுவலர் தங்கமணி வந்தார்.* பகல், 12:14 மணிக்கு, மாதம்பட்டி வருவாய் ஆய்வாளர் அம்சவேணி மற்றும் பேரூர் செட்டிபாளையம் வி.ஏ.ஓ., தயாளன் வந்தனர்.* இதன்பின், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தங்கமணி, பேரூர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, மாதம்பட்டி வருவாய் ஆய்வாளர் அம்சவேணி ஆகியோர், அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
அதிர்ச்சி தகவல்
விசாரித்த அதிகாரிகளிடம் அப்பெண், தனக்கு, 29 வயதாகிறது; தனது தந்தையுடன் வசித்து வருகிறேன் என கூறினார். 'உங்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறுகிறார்களே, உண்மையா' என, அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, 'ஆம், மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. அக்குழந்தை விடுதியில் உள்ளது' என கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், 'உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா' என, கேட்டனர். அதற்கு அப்பெண், திருமணம் ஆகவில்லை என கூறினார்.குழந்தை பிறப்புக்கு யார் காரணம் என அதிகாரிகள் கேட்டபோது, 'தெரியவில்லை' என, அப்பெண் கூறினார்.
தந்தையிடம் விசாரணை
தொடர்ந்து பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 2020ம் ஆண்டு தொண்டாமுத்தூரில் வசித்து வந்தோம். அப்போது எனது மகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு யார் காரணம் என்பது தெரியாது. குழந்தையை, 'தொட்டில் குழந்தை' திட்டத்துக்கு கொடுத்து விட்டோம்.அதன்பின், பேரூரில் சில மாதங்கள் வசித்தோம். உறவினரான ஒரு பெண், சிறிது காலம் எங்களுடன் இருந்தார். பின், நானும், மகளும் இந்த கட்டடத்தில் வந்து, ஓராண்டாக வசித்து வருகிறோம்.கடந்த, மார்ச் மாதம் எனது மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதற்கும், யார் காரணம் என தெரியவில்லை. அந்த குழந்தையையும், 'தொட்டில் குழந்தை' திட்டத்துக்கு கொடுத்துவிட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தந்தை மீது சந்தேகம்
'நீங்கள் தான் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளீர்கள். குழந்தை பேறுக்கு நீங்கள்தான் காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனரே?' என, அதிகாரிகள் கேட்டனர்.அதற்கு, 'நான் பெண்ணின் தந்தையாக இருக்கிறேன். எப்படி அப்படி செய்வேன்' என, அவர் தெரிவித்தார்.இதையடுத்து, பகல், 1:05 மணிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின், அத்தையிடம் போலீசார், சமூகநலத்துறையினர் விசாரணை நடத்தினர். 'இதற்கெல்லாம் தந்தை தான் காரணம். அவர் சரியில்லை' என அந்த பெண் குற்றம் சாட்டினார்.'இரு குழந்தைகளையும், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தது உண்மைதானா' எனவும், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், இரு குழந்தைகளும், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டதும், அதன்பின், தத்து கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
காப்பகத்தில் சேர்ப்பு
இளம்பெண்ணை காப்பகத்துக்கு செல்லலாம் என, அதிகாரிகள் அழைத்தனர். அதற்கு அப்பெண், 'நான் எங்கும் வரமாட்டேன்' என பிடிவாதமாக மறுத்தார். இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்தில் இருந்து தன்னார்வலர்கள் வந்தனர். அதன் பின்னும், அப்பெண் வர மறுத்தார்.தன்னார்வலர்கள் அப்பெண்ணிடம், காப்பகத்தில் உள்ள வசதிகள் குறித்தும், அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் எடுத்துரைத்தனர்.மாலை, 5:15 மணிக்கு, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தந்தையை, அன்னுார் அடுத்த பதுவம்பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.
போலீஸ் வழக்குப்பதிவு
மாவட்ட சமூகநல அலுவலர் தங்கமணி கூறுகையில், ''பத்திரிகை செய்தி வந்தது குறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, நேரில் வந்து விசாரித்தோம். திருமணமாகாத இப்பெண்ணுக்கு பிறந்த, இரு குழந்தைகளும், முறைப்படி குழந்தை காப்பகத்துக்கு ஒப்படைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் என, பல முறை கேட்டபோதும், தெரியாது என கூறினார். பதுவம்பள்ளி மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, உரிய முறையில் பராமரிக்கப்படுவார். கவுன்சிலிங் வழங்கப்படும். அவர் நல்ல மனநிலையில் உள்ளார். சம்பவம் குறித்து, பேரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
பேரூர் டி.எஸ்.பி., திருமால் கூறுகையில், ''சமூக நலத்துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கு யார் காரணம் என விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
வாசகர் கருத்து (23)
congratulation Dinamalar for your social service as well
29 வயது பொண்ணுக்கு தனக்கு இரு குழந்தையை தந்தவன் யார் என்று தெரியாதா ?? மேலும்மேலும் சுகம் தேவைப்படுவதால் தான் காட்டிகொடுககவில்லை. காப்பகம் செல்லவும் மறுத்துள்ளாள்.
முழு விபரம் அறியாது, நீதிபதி ஆகாதீர்கள் மாற்றுத்திறனாளி என்று குறிப்பிட்டுள்ளதை கருத்தில் கொள்ளவும். தவறிழைக்கப்பட்டவர்கள் பெண்ணானால் ஏனோ ஆண் வர்க்கம் அபாண்டமாக அவர்களைக் குறை கூறும் நாள் என்று மறையுமோ? இந்த விஷயத்தில் தினமலருக்கு பாராட்டு.
தினமலருக்கு வாழ்த்துக்கள். உங்களது சமூக பணி தொடரட்டும் .
thank you 😊 DINAMALAR
dinamalar vazhka