அமெரிக்காவில் இந்தியர் குண்டு பாய்ந்து மரணம்
வாஷிங்டன் : அமெரிக்காவில், இந்திய இளைஞர் ஒருவர் காரில் குண்டு பாய்ந்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த சாய் சரண் நக்கா, 25, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உயர் கல்வி கற்கச் சென்றுள்ளார். படிப்பு முடிந்து மேரிலாண்டு நகரில் கடந்த ஆறு மாதங்களாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சாய் சரண், இரு தினங்களுக்கு முன் காரில் மர்மமான முறையில் குண்டு பாய்ந்த காயத்துடன் மயக்க நிலையில் காணப்பட்டார்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தெலுங்கானாவில் நலகொண்டாவில் வசிக்கும் சாய் சரண் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாய் சரண் தந்தை நரசிம்மா கூறியதாவது:
இரண்டு தினங்களாக சாய்சரணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினேன். பதில் வரவில்லை. வேலைபளுவால் பதில் அனுப்பவில்லை என, நினைத்தேன். இப்போது இடிபோல செய்தி வந்துள்ளது. சாய் சரண் சமீபத்தில் தான் புதிய கார் வாங்கினார். அதில் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இனி இது போன்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்க, பாரபட்சமின்றி துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டாம் என, அமெரிக்க அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாய் சரணை துப்பாக்கியால் சுட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக அமெரிக்காவில் அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலேயே பாதுகாப்பு இல்லை. அப்பாவிகளை சுட்டுக்கொண்டே இருங்கள்.