Load Image
dinamalar telegram
Advertisement

4 அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை

Tamil News
ADVERTISEMENT
சேலம் : ''சேலம் உள்பட நான்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில், 'சீட்' எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில், 27வது இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.


இதில், 107 பேருக்கு சான்றிதழ் வழங்கி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:மருத்துவ சேவைக்கு இளங்கலை பட்டப்படிப்பு மட்டும் போதாது. தொடர்ந்து படிக்க வேண்டும். இளங்கலை முடித்த, 107 பேருக்கும், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனுபவம் கிடைத்துள்ளது.உலக சுகாதார நிறுவன இயக்குனர் சவுமியா ஸ்வாமிநாதன், 'வைரசுடன் போராடித் தான் வாழ வேண்டும்' என தெரிவித்துள்ளார்.நாட்டில், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், 5,000க்கும் அதிகமான, வைரஸ் உருமாறி இருப்பதால், அது மருத்துவர்களுக்கு, சவாலான பணியாகி விட்டது.

Latest Tamil News

இனி, மருத்துவர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டி இருக்கும்.இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில், மருத்துவ படிப்பில் ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 425 மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.சேலம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை கே.எம்.சி., மருத்துவ கல்லுாரிகளில், 'சீட்' எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த, கட்டுமான வசதி உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு அமைச்சர் கூறினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:'நீட்' தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., முடித்த, கடைசி 'பேட்ஜ்' மாணவ, மாணவியர்களில் தங்கப்பதக்கம் பெற்ற, 28 பேர், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.கருமுட்டை முறைகேட்டை தடுக்க சென்னை, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரிகளில், செயற்கை கருவூட்டல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் இடங்களை எட்டு லட்சமாக உயர்த்தி விட்டால் +2 எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடுமே

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இப்போ தெருவுக்கு நூறு என்ஜினீயர்கள் இனி தெருவுக்கு பத்து டாக்டர்கள் வாழ்க திராவிடம்

    • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

      கவலை படாதீர்கள்.... நீட் மூலம் அனைத்து டாக்டர்களும் வட நாட்டவர்களுக்கே

    • R Gopalan - kampala,உகான்டா

      15% இடங்கள் ஆல் இந்தியா இடங்களாக ஒதுக்கு படுகின்றன. 85 % இடங்கள் தமிழகத்தில் படித்தவர்களுக்கு தான். அதிக இடங்கள் கிடைக்க பெற்றால் ஆல் இந்தியா ஒதுக்கீட்டில் 15 % மட்டுமே ஒதுக்கப்படும். நீட் டில் அதிக மார்க் வாங்கும் எந்த மாணவனுக்கும் பணம் ஏதும் கொடுக்காமல் மருத்துவம் படிக்க முடியும்.

    • Paramasivam - Chennai,இந்தியா

      அது எப்படி என்று விளக்குவீர்களா? தாங்கள்தான் திராவிஷப்புலியாச்சே

  • ஆரூர் ரங் -

    திருத்தவே மாட்டீர்களா? நம்முடைய தேவை அதிக மருத்துவ சீட்டுகளல்ல.🤔 குப்பை சாக்கடைப் பிரச்சினைகளைத் தீர்த்தால் மட்டுமே பெரும்பாலான நோய்கள் குறையும். அதை சரி செய்யாமல் மேலும் மேலும் மருத்துவமனைகளைக் கட்டுவதும் மருத்துவர்களை உருவாக்குவதும் வீண். காசு பார்க்க செய்யபடுகின்ற ஊழல்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்