ADVERTISEMENT
புதுடில்லி : இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு சிறப்பான நிலையில் இருக்கும் நிலையில் ராணுவத் தொழிலில் இணைந்து செயல்படுவது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவ அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்.
ஆஸ்திரேலிய துணை பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக புதுடில்லிக்கு நேற்று வந்துள்ளார். நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரிச்சர்ட் மார்லெஸ் நேற்று சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகள் சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் பேசினர்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா ஆஸ்திரேலியா இடையே ராணுவ ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது.

குறிப்பாக கொரோனா பரவல் காலத்துக்குப் பின் இது மேலும் வலுவடைந்து வருகிறது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் அதை எதிர் கொள்வது குறித்தும் இரு ராணுவ அமைச்சர்களும் விரிவாக பேசினர். ஏற்கனவே செய்துள்ள ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்துவது குறித்தும் பேசினர்.பரஸ்பரம் நம்பிக்கை புரிந்து கொள்ளுதல் மற்றும் பொது நோக்கத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் ராணுவத் துறையில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந் நிலையில் ராணுவத் தொழிலில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியம் குறித்து ராணுவ அமைச்சர்கள் பேசினர். இதில் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் இந்த ஆட்டத்திலயும் அம்பானியையும், அத்தனையையும் சேர்த்துக்கொள்ளவில்லையா?