Load Image
dinamalar telegram
Advertisement

அதிபரின் ஆலோசகராகிறார் இந்திய பெண் விஞ்ஞானி

வாஷிங்டன்-இந்திய வம்சாவளியான பிரபல அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஆர்த்தி பிரபாகர், 63, அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Latest Tamil News

அமெரிக்க அதிபருக்கு அறிவியல் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதற்கான, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை அலுவலகத்தின் இயக்குனர் பதவிக்கு, பிரபல இன்ஜினியரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஆர்த்தி பிரபாகரின் பெயரை, அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதலுக்குப் பிறகு, அவர் இந்தப் பொறுப்பை ஏற்பார்.


இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண், முதல் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையை, ஆர்த்தி பிரபாகர் பெறுகிறார்.அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம்பெறும் மூன்றாவது ஆசிய அமெரிக்கர், ஹவாய் மற்றும் பசிபிக் நாட்டவர் என்ற பெருமையையும் ஆர்த்தி பெறுவார்.

Latest Tamil News
துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேக்தரீன் தாய் ஆகியோர், ஏற்கனவே அமைச்சரவையில் உள்ளனர்.ஆர்த்தியின் பெயர் உயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (10)

  • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

    சைக்கிள் ஓட்ட கிளம்பினாலேயே கீழே விழுகிறார் ..எதுக்கு வானம் ஏறி வைகுண்டம் போகர ஆசை ..

  • chakra - plano,யூ.எஸ்.ஏ

    ஆர்த்தி இந்தியா குடியுரிமையை உதறிய அமெரிக்க பிரஜை

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

    ....

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    மதம் மாறாதது வியப்புக்குரியது ............

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    ,,,,.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்