பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம்: புகார் அளிக்க தயங்காதீர்கள்
சென்னை: 'பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும்' என போலீஸ் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடும்ப கவுரவம் வெளியில் தெரிந்தால் என்னாவது என்பது உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது மக்கள் போலீசாரிடம் புகார் அளிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது; இது தவறு. புகார் அளிக்காமல் இருப்பதால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: காவல் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதற்காகவே மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. நேரில் தான் புகார் அளிக்க வேண்டும் என்பது இல்லை. 2011ல் பொது மக்கள் 'ஆன்லைன்' வாயிலாக புகார் அளிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. பாலியல் தொல்லைகள் கொடுங்குற்றமாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
பெண்களுக்கென பிரத்யேக உதவி தொலைபேசி எண் 1091 பயன்பாட்டில் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தொல்லைகள் குறித்து 1098 என்ற உதவி தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து வருகிறோம். பொது மக்கள் தவறு செய்வோர் மீது புகார் அளித்து குற்றங்களை தடுக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!