பாக்.,கிற்கு நிறுத்தப்பட்ட நிதிசர்வதேச நிதியம் தர ஒப்புதல்
இஸ்லாமாபாத்:கடந்த 2019ல் பாக்.கிற்கு 39 மாதங்களில் 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இதில் பாதி தொகை மட்டுமே வழங்கப்பட்டது.
பாக்.கில் ஏற்பட்டுள்ள அன்னியச் செலாவணி பற்றாக்குறை பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சமாளிக்க பல்வேறு வரிகளை சர்வதேச நிதியம் பரிந்துரைத்திருந்தது. அவற்றை பாக். அமல்படுத்தாததால் எஞ்சிய தொகையை சர்வதேச நிதியம் வழங்காமல் நிறுத்தி வைத்தது.சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் சில நிபந்தனைகளின் பேரில் பாக்.கிற்கு மீண்டும் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதன்படி நெருக்கடியை சமாளிக்க உடனடியாக 7 500 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியுதவிக்காக பெட்ரோலியப் பொருட்களுக்கு மாதம் 5 ரூபாய் வீதம் அதிகப்பட்சம் 50 ரூபாய் வரை வரி விதிக்கும்படி சர்வதேச நிதியம் பாக்.கிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆண்டுக்கு 15 - 30 கோடி ரூபாய் வரை ஈட்டும் நிறுவனங்களுக்கு 2 - 4 சதவீதம் வறுமை ஒழிப்பு வரி விதிக்கவும் பாக். ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் வரி வசூலை தீவிரப் படுத்தி கூடுதலாக 42 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கவும் பாக். சம்மதித்துள்ளது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!