Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய அரசியலில் முக்கியத்துவத்தை இழந்த காங்., - கம்யூ. கட்சிகள்!

Tamil News
ADVERTISEMENT
ஒரு காலத்தில் இந்திய அரசியலையே ஆட்டிப் படைத்த காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனாதிபதி தேர்தலில் எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவிற்கு தள்ளப்பட்டு, தேசிய அரசியலில் முக்கியத்துவத்தை இழந்துள்ளன.சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சி காங்கிரஸ். மத்தியில் மட்டுமல்ல, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களையும், அரை நுாற்றாண்டுகளுக்கு மேலாக காங்.,தான் ஆண்டது.

முக்கிய இடம்ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள் என, முக்கிய பதவிகளில் காங்., நிர்வாகிகளே இருந்தனர். ஆனால், இன்று ராஜஸ்தான், சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சியில் உள்ளது.மத்தியில் ஆட்சியில் இல்லை என்றாலும், நாட்டின் முதல் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே, இந்திய அரசியலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கிய இடம் இருந்து வருகிறது. மேற்கு வங்கம், 42 எம்.பி., தொகுதிகளைக் கொண்டது. இங்கு, தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டன. இன்று மேற்குவங்கம், திரிபுராவில் கம்யூனிஸ்டுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். கேரளாவில் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது.இப்படி, இந்திய அரசியலையே 75 ஆண்டுகள் ஆட்டிப் படைத்த, காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியை இழந்துள்ளது, இந்த ஜனாதிபதி தேர்தலில் அம்பலமாகி உள்ளது.

லோக்சபா தேர்தல், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் போன்ற முக்கிய தருணங்களில், காங்கிரஸ் தான் முக்கிய முடிவுகளை எடுக்கும். கடந்த 2017-ல், காங்., தலைவர் சோனியா தலைமையில்தான், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் மீராகுமார் தான் நிறுத்தப்பட்டார்.ஆனால், 2017 டிசம்பரில் ராகுல் காங்., தலைவரானதும், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. 2019 லோக்சபா தேர்தலில், ராகுல் தான் பிரதமர் என, காங்கிரசார் பிரசாரம் செய்தனர். ஆனால், அதை காங்கிரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியவில்லை.

ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வுக்கு 50 சதவீதத்திற்கும் குறைவாகவே ஓட்டுகள் உள்ளது என்றாலும், அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் சந்தர்ப்பத்தை, ராகுல் நழுவ விட்டு விட்டார் என்று, காங்கிரசுக்கு உள்ளேயே பேச்சு எழுந்துள்ளது.

ஐந்து முதல்வர்கள்பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ.,வுடன் இணக்கமாக இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பா.ஜ.,வை தீவிரமாக எதிர்த்து வருகிறார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர பா.ஜ., எதிர்ப்பாளரே. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ., கூட்டணியில் இல்லை; காங்கிரஸை வெளிப்படையாக எதிர்ப்பவர்களும் அல்ல.நிதிஷ்குமார், சந்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகிய ஐந்து முதல்வர்களையும், ராகுல் சந்தித்து பேசியிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம். கடைசியில் கூட்டணியில் உள்ள, தமிழக முதல்வர் ஸ்டாலின், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்கள் கூட்டத்தை கூட, ராகுலால் கூட்ட முடியவில்லை; அதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

முக்கியத்துவம்கடைசியில், மம்தா பானர்ஜியும், சரத்பவாரும் இணைந்து, முன்னாள் பா.ஜ.,காரரான யஷ்வந்த் சின்ஹாவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர்.இதற்காக இருமுறை நடந்த கூட்டங்களும், காங்., தலைமையில் நடக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எந்த கூட்டங்களிலும், சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை.அதுபோல, 2002 ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.,வும், காங்கிரசும் ஆதரித்த அப்துல் கலாமை எதிர்த்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக வேட்பாளரை நிறுத்தின. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்த தேர்தலில், ஒரு காலத்தில் தங்கள் பரம எதிரியாக இருந்த மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காங்., - கம்யூனிஸ்ட் கட்சிகள் வீழ்ச்சி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த வீழ்ச்சி தொடருமா என்பது, அடுத்தடுத்து வரவுள்ள ஏழு மாநிலங்கள் சட்டசபை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்கும். - நமது நிருபர் -

Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

 • DVRR - Kolkata,இந்தியா

  காங்கிரஸ் - பாகிஸ்தான் முஸ்லீம் நேரு காங்கிரஸ் கம்ம்யூனிஸ்ட் - சீனா ஆதரவு இந்திய எதிர்ப்பு கம்ம்யூனிஸ்ட். இவர்களுக்கு இந்தையாவில் என்ன வேலை என்று எனக்கு இது நாள் வரை புரியவில்லை உனக்கு அந்த நாடு தான் பிடிக்கும் என்றால் அங்கே சென்று விடு என்று மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் சமிக்ஞை இது ஆப், தெலிங்கனா, திமுக .....இதன் தொடர்ச்சியாக இருந்தால் இந்தியா இருக்கும் இல்லையென்றால் பாகிஸ்தான் முஸ்லீம் அரசு தான் நிற்கும்

 • sankaseshan - mumbai,இந்தியா

  படத்தில் உள்ள அனைவரும் தேச துரோகிகள் ,இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது கம்யூனிஸ்ட் காலாவதியான கட்சி காங்கிரஸ் கரைந்து கொண்டிருக்குகிறது கேசரி கட்சி டுபாகூர் மக்களை முட்டாளாக்குகிறது

 • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

  ஒரு காலத்தில் நான் ராஜாவாக இருந்தேன், இப்பொழுது... இது தான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இன்றைய நிலைமை. இதெற்கெல்லாம் காரணம் என்ன என்று இவர்கள் புரிந்துகொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்பேர்ப்பட்ட ராஜவாக இருந்தாலும் ஒரு நாள் பிச்சைக்காரனாக தான் ஆக முடியும். இனிமேல் ஒவ்வொரு தேர்தலிலும் வாங்க போகும் மக்களின் புறக்கணிப்பு தொடரும். என்று உண்மை புரிந்து இவர்கள் நிலைமையை மாற்றிக் கொள்வார்கள். நான் பேசுவது தான் சரி. சீனா தான் கிரேட் அங்கே தான் காரோண வியாதியை சரியாக கையாண்டார்கள். அங்கே தான் இருநூறு கோடி ஊசி போட்டார்கள் என்றெல்லாம் பெருமை வேறு. நீங்கள் இருக்கின்ற நாட்டிற்கு என்ன தான் செய்வீர்கள் இடது கும்பல்கலே. திரும்ப திரும்ப பழைய வரலாற்றை பேசுவதும் நாங்கள் அப்படியாக்கும் என்று தற்பெருமை பேசுவதையும் இந்த கும்பல் விடாது. அதானல் தோல்விகளும் தொடர செய்யுமே தவிர நீங்கள் சொன்ன ஏழு மாநில தேர்தல்களில் எந்த அதிசயமும் நடக்க போவதில்லை. இனிமேல் இவர்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் உண்மையாக தொண்டு செய்வதாக இருந்தால் வாழலாம் அல்லது முடிந்து போவார்கள். பார்க்க தானே போகிறோம். இன்னமும் மூன்று வருங்காலத்தில் இப்பொழுது இருக்கின்ற நிலைமையும் காய் விட்டு போகும் தான் மட்டும் வாழ நினைத்தால் அழிவு வந்து தான் தீரும்.

 • ஆரூர் ரங் -

  5 பைசா 10 பைசாவுக்கு உண்டியல் குலுக்கின காலமெல்லாம் போக இப்போ 🙃🙃தங்கக் கடத்தல் ஆசாமியை முதல்வராக்கி அழகு பார்க்குமளவுக்கு முன்னேற்றம்.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் வீழ்ச்சி நாட்டுக்கு நல்லதல்ல. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்... ஊழியர்களின் ஈ.பி.எப். தொகைக்கு வட்டியை இன்றைய மத்திய அரசு குறைத்து வருகிறது. அதை ஏதோ எண்ணெய் விலையைப் போல் அவ்வப்போது மாற்றியும் வருகிறது.. இதை தட்டிக்கேட்பவர்கள் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் மட்டுமே... ஆனால் அவற்றுக்கு போதிய பிரதிநித்துவம் இல்லை...

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

   தட்டி கேட்க ஆள் வேண்டும் என்பது வரை சரி. ஆனால் அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி சரியான ஆள் அல்ல. தேச துரோகிகள். சீன கைக்கூலிகள்.

Advertisement