ADVERTISEMENT
மாணவர்களுக்கு பாராட்டு
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 6,448 மாணவர்களில், 4,890 பேர் என, 75.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், சமூக அறிவியல் பாடத்தில், இரண்டு மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.அதே போல், பிளஸ் 2 பொதுத் தேர்வில், 5,642 மாணவர்கள் தேர்வு எழுதி, 4,882 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 86.53.இதில், கணிதவியல், வேதியியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவர்; பொருளியல் ஆறு; வணிகவியல் 16; கணக்கு பதிவியல் 17; கணினி அறிவியல் நான்கு; கணினி பயன்பாடுகள் ஐந்து என, 51 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனர்.இது போல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ரிப்பன் மாளிகைக்கு அழைத்து, மேயர் பிரியா வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!