Load Image
dinamalar telegram
Advertisement

மார்பக புற்றுநோயை ரத்த பரிசோதனையில் அறியலாம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை, நாடு முழுதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், 'டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ்' உடன் இணைந்து, மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையை கண்டறியும் புதிய நடைமுறையை துவங்கியுள்ளது. இதற்கான துவக்க விழா, சென்னை, ைஹதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நேற்று நடந்தது.அதன்படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே ரத்த பரிசோதனையில் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.சென்னையில் நடந்த துவக்க விழாவின்போது, அப்பல்லோ மருத்துவமனைகள் குழும செயலாக்க துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, மார்பக புற்றுநோயை கண்டறியும் ரத்த பரிசோதனை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்வில், அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:பெண்கள், தாங்களாகவே முன்வந்து, ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு முன், பரிசோதனை முறையில் சில இடர்ப்பாடுகள் இருந்தாலும், இந்த ரத்த பரிசோதனையில், எவ்வித பிரச்னையின்றி பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.செயலாக்க துணை தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், ''மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போதைய ரத்த பரிசோதனையில், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறலாம்,'' என்றார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement