இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை அடுத்து, இந்தியாவில் மாநிலங்களின் நிதி நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு ஒன்றை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.அதில் பீஹார், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள், கொரோனா தொற்று பரவலை அடுத்து, நிதி ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ரொக்க மானியங்களை வழங்குதல், இலவச பயன்பாட்டு சேவைகளை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் மறைமுகமான மற்றும் வெளிப்படையான உத்தரவாதங்களை நீட்டித்தல் ஆகியவை, மாநிலங்களை மிகவும் சிக்கலில் ஆழ்த்துவதாக உள்ளன.மேலும், மாநிலங்கள் தங்களுடைய கடன் நிலையை சரிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, மேற்குவங்கம், பீஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள், நாட்டில் அதிக கடன் சுமையுடன் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வரி வருவாயில் மந்தநிலை, செலவினங்கள் அதிகரிப்பு, உயரும் மானியச் சுமை ஆகியவை, மாநில அரசுகளின் நிதி சுமை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் தன்னிச்சையாக வெளி நாடுகள்/ஐக்கிய நாடுகள் போன்றவற்றிலிருந்து கடன் பெறுவதை தடை செய்ய வேண்டும். இத்தகைய கடன்கள் இலவசங்களுக்கு செலவிடப்படுகின்றன அல்லது இலவசங்களுக்கு செலவிட்டதால் பொதுமக்கள் சேவைக்கு கடன்கள் பெறப்படுகின்றன. மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும்.