Load Image
dinamalar telegram
Advertisement

எதாக இருந்தாலும் பேசலாம்; பொதுக்குழுவுக்கு வாங்க!: ஓபிஎஸ்.,க்கு இபிஎஸ் அழைப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு , இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


அ.தி.மு.க., பொதுக்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், ஒற்றை தலைமை பிரச்னை பெரிதாகி உள்ளது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அளித்த மனுவை ஏற்க ஆவடி போலீசார் மறுத்து விட்டனர்.

Latest Tamil News


இந்நிலையில், பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளதாவது: பொதுக்குழுவுக்கு வாருங்கள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் இல்லை. திட்டமிட்டபடி பொதுக்குழு , செயற்குழு நடக்கும். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவுக்கு அழைத்தது போல், பங்கேற்போம் எனக்கூறியுள்ளார்.

ஒப்புதல் கடிதம்



இதனிடையே, அ.தி.மு.க.,வில் 2,625 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 120 பேரை தவிர 2505 பேரின் ஒப்புதல் கடிதங்களை பழனிசாமி தரப்பு பெற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (44)

  • Vaithilingam Ahilathirunayagam - london,அருபா

    இவர்களில் யார் அதிமுகவின் இணைப்பாளர்? கட்சி எதை நோக்கிப் போகின்றது? இதற்காகவா, எம்ஜிஆர் அவர்கள் கட்சி தொடங்கினார்?

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    எப்படியோ ஒரு திராவிட கூட்டம் ஒழிந்தால் சந்தோஷமே... இன்னொரு கூட்டமும் ஒழிந்தால் தமிழகம் தலை நிமிரும்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    எதாக இருந்தாலும் பேசலாம் வாங்க. ஆகா, அந்த "எதாக" என்கிற ஒரே பதத்தில் எனக்கு பல அர்த்தங்கள் புலப்படுகிறது. உங்களுக்கு???

  • Arachi - Chennai,இந்தியா

    எடப்பாடியார் ஒரு தகுதியற்ற முதலமைச்சராக இருந்தவர். 6 வது வகுப்பு மாணவன் கூட கம்பராமயணம் யார் எழுதினார் என்று கேட்டாக்கூட சரியாகச் சொல்லுவான். ஒரு நாட்டின் முதலமைச்சரே தவறாகச்சொன்னால் இவர்மீது கல்வி கற்கும் மாணவர்களிடையில் என்ன நம்பிக்கை மதிப்பு இருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸ் என்று கூட சரியாக உச்சரிக்கத்தெரியாதவர் கல்வியைப்ப்ற்றி கல்விக்கொள்கையைப்பற்றி என்ன கருத்துக்கூறமுடியும். நல்லக்கட்சிக்காரராக இருக்கலாம் ஆளத்தகுதியற்றவர்.ஏன் ஜெயலலிதா அவர்கள் ஒவ்வொரு முறையும் பன்னீர்செல்வத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். எனென்றால் அவர் மீது நம்பிக்கை இருந்திருக்கின்றது.

  • periasamy - Doha,கத்தார்

    பன்னீர்செல்வத்தின் பதவியை புடுங்க எல்லா ஏற்பாட்டையும் பன்னிக்கொண்டே வாங்க பேசலாமா?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்