Load Image
Advertisement

ஓ.பி.எஸ்., தவறுக்கு மேல் தவறு செய்கிறார்: ஜெயக்குமார்

 ஓ.பி.எஸ்., தவறுக்கு மேல் தவறு செய்கிறார்: ஜெயக்குமார்
ADVERTISEMENT
சென்னை: பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக., அனைத்து பிரிவுகளும், அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் அதிமுக.,விற்கு தேவை என தீர்மானித்துள்ளது. அதற்கு இபிஎஸ் பதவி ஏற்க வேண்டும் என நேரில் தெரிவித்துள்ளனர்.


அதிமுக., ஜனநாயகம் மலர்ந்த மாபெரும் இயக்கம். அராஜக போக்கு கிடையாது. தவறுக்கு மேல் தவறு செய்கிறார் பன்னீர்செல்வம். தவறான பாதையை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கிறார். அந்த கவலையை மனக்கஷ்டத்தோடு வெளிப்படுத்துகிறேன். பொதுக்குழுவில் கலந்து கொண்டு, அங்கு எடுக்கும் முடிவுக்கு அவர் உட்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும். அது தான் தொண்டர்களின் எண்ணம். ஓ.பி.எஸ்., கலந்து கொள்வாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் கலந்து கொள்ள வேண்டும் என்பது தான் விருப்பம். கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

Latest Tamil News


ஒற்றை தலைமை நோக்கி கட்சி செல்கிறது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மதிப்பு தர வேண்டும். பொது மக்கள், தொண்டர்கள், மா.செ.,க்கள், கட்சியினரின் விருப்பமும் அதுதான். ஊரோடு ஒத்து வாழ் என்பது போல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.


வாசகர் கருத்து (22)

  • Sridhar - Chennai,இந்தியா

    எல்லோரும் விருப்பத்தை பொது வெளியில் பேசி அவமதித்து விட்டு வா என்றால் அவர் வருவாரா ?

  • Soumya - Trichy,இந்தியா

    அண்ணாமலை போன்ற ஒருவர் தான் தமிழ்நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் சுடலைக்கு அறிவும் கம்மீ பாஷையும் கம்மீ மொத்தத்துல கொள்ளைக்கார திராவிஷத்தை ஒழிக்க வேண்டும்

  • Samathuvan - chennai,இந்தியா

    ஜாக்கிரதை

  • David DS - kayathar,இந்தியா

    பன்னீரை கட்சியை விட்டு தூக்க போவது உறுதி, அதற்கு தான் இந்த முன் ஏற்பாடு எல்லாம்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    இவன் தான் எப்படி முதல்வன் ஆகலாம் என்று யோசிப்பவன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்