Load Image
dinamalar telegram
Advertisement

துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம்: ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை

Tamil News
ADVERTISEMENT

ராய்ரங்பூர்: தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, ஒடிசாவில் உள்ள கோயிலில் துடைப்பத்தால் தானே தூய்மை செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம், அடுத்த மாதம் 25ல் முடிவுக்கு வருகிறது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ல் நடக்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முதல் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Tamil News
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திரவுபதி முர்முவுக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இன்று (ஜூன் 22) காலை ஒடிசாவில் உள்ள ராய்ரங்பூர் ஜகன்னாதர் கோயிலுக்கு வழிபாடு செய்ய சென்றார். அப்போது கோயில் வளாகத்தைத் துடைப்பத்தால் சுத்தம் செய்த முர்மு, பின்னர் கோயில் மணியை அடித்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும், அங்கிருந்த நந்தி சிலையை ஆர கட்டித் தழுவினார். ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும் துடைப்பத்தால் தூய்மை செய்து தரிசனம் செய்த முர்முவின் எளிமையை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளன.
Latest Tamil News


வாசகர் கருத்து (95)

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  ஹூம்..நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கு, பிராமண கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட கட்சி ஒரு பழங்குடி இனப் பெண்மணியை வேட்பாளராக அறிவிக்கிறது..ஆனால் சமூகநீதி, சமத்துவம் என்று வாய்ச்சவடால் அடித்து, ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ராமசாமி நாயக்கர் வழியில் வந்த இயக்கங்கள்? இன்று வரை பட்டியல் இன மக்களுக்கோ, பழங்குடியினருக்கோ தலைமைப் பதவி தருவது பற்றி யோசித்தது கூட இல்லை.. சுண்டு விரலைக் கூட உயர்த்தியதில்லை. சும்மா உசுப்பி விட்டு அவர்களை சுரண்டி தனிமைப் படுத்தியதோடு சரி கட்சி, அமைச்சரவை, நாடாளு மன்ற உறுப்பினர் பதவி என்றால் அவை குடும்பத்தினருக்கு மட்டும்தான் இனியாவது அந்த மக்கள் விழித்துக் கொண்டால் சரி

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  நந்தியின் காதில் நமக்கு வேண்டியதை சொல்வது ஐதீகம். அதைத்தான் அவர் செய்தார். மற்றபடி சமூக நீதி பேசும் பொய் தலைவர்கள் பலர் இப்போது ஜாதி வெறியர்கள் போல பேச ஆரம்பிப்பார்கள்.

 • Madhumohan - chennai,இந்தியா

  குருமூர்த்தி என்ன சொல்றார்னு பாப்போம்

 • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

  வெற்றிக்கான வழிகளை நன்கு அறிந்துவைத்துள்ளார்

 • sundaram sadagopan - Bengaluru,இந்தியா

  அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ஆணவ சிரிப்பு. இங்கு நீ சிரிக்கும் சிரிப்பினிலே ஆண்டவன் சிரிப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்