Load Image
dinamalar telegram
Advertisement

திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!

Tamil News
ADVERTISEMENT
பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.


1958 ஜூன் 20: ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி கிராமத்தில் பிறந்தார். 'சான்டல்' பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றினார்.


1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகரின் கவுன்சிலரானார். மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.


2000 மார்ச் 6 - 2002 ஆக. 6 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், 2002 - 2004 மே 16 வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.


2006 - 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவராக இருந்தார்.2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.


2010 - 2015 : மயூர்பாஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தார்.
Latest Tamil News

2013 - 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தார்.


2015 மே 18 - 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக பணியாற்றினார்.


2022 ஜூன் 21: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வென்றால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமை பெறுவார்.


வாசகர் கருத்து (94)

  • Tamilnesan - Muscat,ஓமன்

    பிஜேபி கார்பொரேட் கம்பனி அல்ல (நீங்கள் யாரவது திமுக கம்பனியை மனதில் நினைத்தால் நான் பொறுப்பல்ல) ..........ஜனநாயக கட்சி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • ரவிச்சந்திரன் முத்துவேல் - கரூர்,இந்தியா

    வருங்கால குடியரசுத்தலைவருக்கு வாழ்த்துக்கள் நடுநிலைமையோடு, தேங்கி உள்ள அனைத்து மனுக்களையும் உடனடியாக பரிசீலித்து விரைவில் எதோ ஒருமுடிவெடுத்து முடித்து வையுங்கள்

  • Rajkumar - Madurai,இந்தியா

    Tamilnadil...

  • Jayaraman Viswanathan -

    0 ............

  • Vijay - Chennai,இந்தியா

    ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement