Load Image
dinamalar telegram
Advertisement

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ‛நோ சொன்ன கோபாலகிருஷ்ண காந்தி: எதிர்க்கட்சிகள் திணறல்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ணன் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிட மறுத்துள்ளார். இதனால், பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என முடிவெடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன.


ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஜூலை 18ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்ளாக வேட்பாளரை அறிவிக்க பா.ஜ., ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

Latest Tamil News
பா.ஜ., கூட்டணி வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் 13 எதிர்க்கட்சிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தின. இதில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முன்மொழியப்பட்டன. ஆனால், இருவரும் அதனை ஏற்க மறுத்தனர். சில கட்சிகள் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க மாநில முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரை பொது வேட்பாளராக நிறுத்த பரிசீலித்தன.

Latest Tamil News
ஆனால், தற்போது கோபாலகிருஷ்ண காந்தியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛மிக உயர்ந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எதிர்க்கட்சியின் வேட்பாளர் தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒருவராக இருக்க வேண்டும்' எனக் கூறியதுடன் தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு கோபாகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அனைவரும் ஆதரிக்கும் வகையிலான பொது வேட்பாளரை நிறுத்தலாம் என கணக்குப்போட்ட எதிர்க்கட்சிகள், தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய திண்டாடி வருகின்றன.


வாசகர் கருத்து (25)

 • ஆரூர் ரங் -

  நோ? 🤭நோஸ் கட்.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  எப்படியும் பிஜேபி வெங்காய நாயுடுவை ஏற்கப்போவது இல்லை. பேசாமல் எதிர்கட்சி எல்லாம் சேர்ந்து வெங்காய நாயுடுவை தேர்வு செயதால் பிஜேபி மனம் மாரி அதரவு கொடுக்கலாம்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  Stalin is the better choice...ha...ha...ha...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  திருவிழா நெருங்கிடிச்சி .... விருந்து வைக்க கடா ஒன்னும் சிக்க மாட்டேங்குதே...

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  மூன்று பேர்களை முன்மொழிந்து ஒருவர்கூட சம்மதம் தெரிவிக்கவில்லை. இன்னும் ஒருவர் எஞ்சியுள்ளார். அவர்தான் நமது பழைய பிரதமர் தேவ கவுடா அவர்கள். அவரையும் விட்டு வைக்காதீர்கள். அவரை தன்னை கேட்டவுடன் சம்மதம் சம்மதம் சம்மதம் என்றே சொல்லிவிடுவார். அவருக்கு அரசியலில் ஆசை இல்லை என்று சொல்வார்கள் மற்றவர்கள். ஏன் இந்த அலங்கோலம் எதிர்க்கட்சிகளுக்கு. மோடிமீது இவ்வளவு பகைமை ஏன்? களங்கமில்லாத அரசு - எந்த ஊழல்களும் இல்லாத அரசு. மோசடி செய்தவர்களிடமிருந்து பல கோடிகள் திரும்பப்பெற்ற அரசு. இப்படி இருக்கையில் அரசை புகழாவிட்டாலும் ஒரு தனிப்பட்ட நபரை எதிப்பது - கண்ட வார்த்தைகளால் திட்டுவது இதெல்லாம் அநாகரிகம். அவமானம் . நாட்டின் தரம் குறைக்கப்பட்டு அயல்நாடுகளில் நமது மதிப்பை குறைத்துக்கொள்கிறோம். இனியாவது ஜனாதிபதி தேர்தலில் அரசுடன் இணக்கமானாக செல்வதே நாட்டின் முன்னேற்றம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்