செஸ் விளையாட்டு: பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கும்: பிரதமர்
புதுடில்லி:சதுரங்க போட்டியை விளையாடும் குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை பெற்றவர்களாக மாறி வருகின்றனர் என செஸ் ஒலிம்பியாட் ஜோதி துவக்க விழாவில் பிரதமர் கூறினார்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஜோதி ஓட்டம் தலைநகர் புதுடில்லியில் துவங்கியது. தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் பிரதமர் மோடியிடம் ஜோதியை ஒப்படைத்தார். ஜோதியை பெற்றுக்கொண்ட செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மைதானத்தை வலம் வந்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களை சேர்ந்த 75 நகரங்கள் வழியாக வலம் வந்து ஜூலை 28 ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கபட்டு போட்டிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது.
விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கு டார்ச்ரிலே நடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் நமது முன்னோர்கள் மூளையின் பகுப்பாய்வு வளர்ச்சிக்காக செஸ் போன்ற விளையாட்டுகளை கண்டுபிடித்தனர். சதுரங்க போட்டியில் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் சதுரங்க போட்டியின் திறன் அதிகரித்துள்ளது. சதுரங்க போட்டியை விளையாடும் குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை பெற்றவர்களாக மாறி வருகின்றனர்.
சதுரங்க போட்டியில் சரியான நகர்வை முன்னெடுப்பதன் மூலம் வெற்றியை பெறலாம். தொலை நோக்கு சிந்தனை உள்ளவர்கள் சிறந்த வெற்றியை பெறலாம் என செஸ் விளையாட்டு சொல்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இது வரை இல்லாத அளவிற்கு அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் கூறினார்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ம் தேதி சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஜோதி ஓட்டம் தலைநகர் புதுடில்லியில் துவங்கியது. தலைநகர் புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் பிரதமர் மோடியிடம் ஜோதியை ஒப்படைத்தார். ஜோதியை பெற்றுக்கொண்ட செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மைதானத்தை வலம் வந்தார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களை சேர்ந்த 75 நகரங்கள் வழியாக வலம் வந்து ஜூலை 28 ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கபட்டு போட்டிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது.
விழாவில் கலந்து கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்தாகூர் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கு டார்ச்ரிலே நடப்பது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும் என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில் நமது முன்னோர்கள் மூளையின் பகுப்பாய்வு வளர்ச்சிக்காக செஸ் போன்ற விளையாட்டுகளை கண்டுபிடித்தனர். சதுரங்க போட்டியில் இந்தியாவின் திறன் அதிகரித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் சதுரங்க போட்டியின் திறன் அதிகரித்துள்ளது. சதுரங்க போட்டியை விளையாடும் குழந்தைகள் பிரச்னைகளை தீர்க்கும் திறனை பெற்றவர்களாக மாறி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வாசகர் கருத்து (7)
ஆஹா, அதி அற்புத கண்டுபிடிப்பு ❗❗❗
வெண்டைக்காய் கோவக்காய் சாப்பிட்டாலே அதிகரிக்கும்
நான் ஒரு செஸ் வீரன். செஸ் கால விரயம் செய்யும். சீட்டாட்டம் போல திரும்ப திரும்ப விளையாட வெறியை ஏற்படும். தூக்கத்தை கெடுக்கும். பெரிய அளவில் போனால் விஷயம் வேறு.
சதுரங்கமாடி எட்டாண்டுகளாக உண்டாக்கிய பிரெச்சனைகளை தீர்த்திருக்கவேண்டும்
எந்த சயண்ட்டிஃபிக் ஆய்வுலே இதுமாதிரி சொல்லியிருக்கு ஜீ? உலக செஸ் நிபுணர்கள் இது வரை எந்த பிரச்சனைகளை தீர்த்து வெச்சிருக்காங்க?