Load Image
dinamalar telegram
Advertisement

ஜனாதிபதி தேர்தல்: பின்வாங்கினார் பரூக் அப்துல்லா

Tamil News
ADVERTISEMENT
ஜம்மு: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பரிசீலனையில் இருந்து தனது பெயரை திரும்ப பெற்று கொள்வதாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வரும் 18 ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் டில்லியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடந்தது. அப்போது, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
Latest Tamil Newsஇந்நிலையில் பரூக் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்,: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக பரிசீலனை செய்யப்படுவதில் இருந்து எனது பெயரை விலக்கி கொள்கிறேன். ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கியமான காலகட்டத்தை கடந்து வருகிறது என நம்புகிறேன். இந்த நிச்சயமற்ற நேரத்தில், எனது முயற்சி உதவியாக இருக்கக்கூடும். நான் இன்னும் தீவிரமான அரசியலை முன்னெடுத்துள்ளேன். காஷ்மீர் மற்றும் நாட்டிற்கு சேவை செய்ய பங்களிப்பை அளிப்பதில் ஆர்வமாக உள்ளேன். எனது பெயரை முன்மொழித்த மம்தாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (22)

  • J. G. Muthuraj - bangalore,இந்தியா

    தோக்குறதுக்கு ஒரு ரைட் கேண்டிடேட் வேணும்.....

  • Neutral Umpire - Chennai ,இந்தியா

    பல்பு வாங்கறது மாதிரியா பின் வாங்கறது ?

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    விஷயம் தெரிஞ்சவங்க புரிஞ்சுக்குவாங்க... காஷ்மீர் முதல்வரா இருந்த போது, இந்த பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் நிறைய லஞ்ச ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் வந்தன. கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி, அந்த ஊழல் சம்பாத்தியத்தில், தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைத்துள்ளனர் இருவரும். இந்த ஊழல் வழக்கு இன்னமும் முடியவில்லை. அதனால் தான் இந்த தொப்பிக்காரன் பின்வாங்குகிறான்..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பரூக் அப்துல்லா தானாகவே பின்வாங்கியது எவ்வளவோ சிறப்பு. இல்லையென்றால், போட்டியிட்டிருந்தால் டெபாசிட் கூட கிடைத்திருக்காது, அதாவது ஒரு வோட்டு கூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    One wicket down. Soon many more.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்