Load Image
dinamalar telegram
Advertisement

ஒற்றைத் தலைமை தீர்மானம் வந்தால் அதிமுக., அழியும்: வைத்திலிங்கம் அச்சம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: ஒற்றை தலைமை குறித்து அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தால், கட்சி அழிவுப்பாதைக்கு செல்லும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.


அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்துள்ள நிலையில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை எம்.பி., தம்பிதுரை சந்தித்து பேசினார்.


இது தொடர்பாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது: ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னை இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வு கொண்டு வருவது, ஜெயலலிதா எண்ணப்படி மீண்டும் ஆட்சிக்கு வருவது, கட்சியை சுமூகமான நிலைக்கு கொண்டு வருவது குறித்து பன்னீர்செல்வத்தை சந்தித்து தம்பிதுரை ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது கருத்தை பன்னீர்செல்வம் கூறினார். அதனை பழனிசாமியிடம் கூறுவதாக தம்பிதுரை கூறிவிட்டு சென்றார்.


2 பேரும் கையெழுத்து போட்டு தான் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன் பிறகு பல்வேறு சூழல் மாறிவிட்டது. அது குறித்து பேசி வருகிறோம். பொதுக்குழுவில் இருவரும் கையெழுத்து போட்டால் தான் தீர்மானம் செல்லும். தானாக தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அப்படி கொண்டு வந்தாலும் செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். பொதுக்குழுவால் ரத்து செய்ய முடியாது. இறந்து போனால் மட்டுமே பொதுக்குழு மூலம் தற்காலிகமாக தான் தேர்வு செய்ய முடியும். ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால், கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக்குழு கூட்டம் நிச்சயம்



முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:
Latest Tamil News
தீர்மானக்குழு ஆலோசனை கூட்டத்தில், ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கவில்லை. ஒற்றை தலைமை இரட்டை தலைமை குறித்து ஒபிஎஸ் இபிஎஸ்., சிடம் தான் கேட்க வேண்டும். ஒற்றை தலைமை குறித்து கட்சி மேலிடம், பொதுக்குழு முடிவு செய்யும். திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். தேர்தல் முடிவுக்கும் ஒற்றை தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (13)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கும் தேசியம், தெய்வீகம், திமுக எதிர்ப்பு என்ற முப்பெரும் பண்புகள் ஒருங்கே கொண்ட ஒற்றைத்தலைமை அண்ணாமலை அவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    உண்மையிலே பதவிக்கு ஆசை படும் பரதேசிகள் ஆட்டம் இது. அளிப்படி ஒற்றை தலைமை இரட்டை தலைமை இல்லாமல் எல்லோரு ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுங்கள். இல்லையே அம்மாவை புதைத்த இடத்துக்கு அருகில் கட்சின் கோடியாய் புதையுங்கள். அது தான் பதவி ஆசை பிடித்த மாடுகளுக்கு புத்தி வரு. அம்மாவின் ஆன்மா உங்களை மன்னிக்காது.

  • Ragam -

    இப்போது மட்டும் என்ன நடக்கிறது,

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இப்படியே உங்களுக்குள் சண்டை தொடர்ந்தாலும் அதிமுக அழியும். மாறாக திமுக அசைக்க முடியாத ஒரு கட்சியாக மாறும். எனக்கென்னமோ, இந்த ஒற்றை, ரெட்டை சங்கதிகள் எல்லாம், திமுகவினர் சொல்லி யாரோ உங்கள் கட்சியில் உள்ள எட்டப்பன் சிலர் செய்கிறார்கள் என்கிற சந்தேகம். கண்டுபிடியுங்கள் who are those black sheeps?

  • John Miller - Hamilton,பெர்முடா

    .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்