Load Image
dinamalar telegram
Advertisement

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டம்: இன்றும் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு

Tamil News
ADVERTISEMENT
பாட்னா: ' அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. பீஹார் மற்றும் உ.பி.,யில் ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது.

அக்னிவீரர்கள்



நம் ராணுவத்தில் 'அக்னிவீரர்'கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

போராட்டம்



இந்நிலையில், இத்திட்டத்திற்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணிபாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தால், முப்படைகளில் உள்ள சீக்கியர் ஜாட் போன்ற படைப்பிரிவுகளில் மாற்றம் ஏற்படும் என கூறியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீஹாரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் மீது கல்வீசப்பட்டன. ரயில் நிலைய சொத்துகள் சூறையாடப்பட்டன. உ.பி., ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் போராட்டம் பரவியது.

தீவைப்பு



இந்நிலையில், இன்றும்(ஜூன் 17) போராட்டங்கள் நீடித்தது. பீஹாரில் துணை முதல்வர் ரேணு தேவிக்கு சொந்தமாக மேற்கு சாம்பிரான் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தும், சாலைகளை மறித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.Latest Tamil News
பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை வீசியும், ரயில்வே சொத்துகளை அடித்து நொறுக்கியும் ரகளை செய்தனர். சமஸ்திபூர் மாவட்டத்தில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. லக்கிசராய் மாவட்டத்தில் பா.ஜ., அலுவலகம் மீது தாக்கப்பட்டது.

Latest Tamil News

உ.பி.,



உ.பி.,யின் பல்லியா பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த சொத்துகளை சேதப்படுத்தியதுடன், ரயில் பெட்டிக்கும் தீவைத்தனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனையடுத்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மற்ற பெட்டிகளை தனியாக பிரித்து பாதுகாக்கும் பணியில் போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

உ.பி., மேற்கு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கம்புகளுடன் வந்த போராட்டக்காரர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த கடைகள் மற்றும் சொத்துகளை அடித்து நொறுக்கினர்.

தெலுங்கானா



தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடி, தீயிட்டு கொளுத்தி ரயில்வே தண்டவாளங்களில் வீசினர். இதனால் பயணிகள் அலறியடித்து தப்பி ஓடினர். ரயில் நிலைய கடைகளை சூறையாடிய இளைஞர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார், 10 பேர் காயமடைந்தனர். மேலும், செகந்திராபாத் ரயில் நிலையம் ரூ.20 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இணைய சேவை துண்டிப்பு



Latest Tamil Newsம.பி., மற்றும் ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவின் பல்வல் மாவட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

200 ரயில்கள் ரத்து



இதனிடையே, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ரயில் தண்டவாளங்களில் மாணவர்கள், இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். மேலும் சில இடங்களில் தடையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், நாடு முழுவதும் 200 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மால்டா டவுன்- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா - டில்லி துரோந்தோ ரயில் உள்ளிட்ட 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Comment Here வாசகர் கருத்து (65)

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    .....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

    ....

  • r ravichandran - chennai,இந்தியா

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கையில் , ஏழை மக்கள் , நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை அதிக பட்சமாக ஒரு மாதத்திற்குள் மாற்றி கொண்டு விட்டனர். மாற்ற முடியாமல் போனவர்கள் யாரென்று இந்திய மக்கள் நன்கு அறிவார்கள்.

  • r ravichandran - chennai,இந்தியா

    அடிப்படை ஒழுக்க நெறி இல்லாமல் ரெயிலை எரிக்கும் இவர்கள் எப்படி இராணுவ சேவை புரிய முடியும். வன்முறை நடதுப்பவர்களிடம் சமரசம் செய்து கொள்ள கூடாது. இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்த கலவரங்கள் தூண்டி விடுபவர்களை முதலில் கவனிக்க வேண்டும்

  • Venugopal S -

    உத்தரப்பிரதேசத்தில் பொதுச் சொத்துக்களை நாசம் செய்த இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ள மாநில பாஜக முதல்வர் யோகிக்கு தைரியம் உண்டா ?

Advertisement