Load Image
dinamalar telegram
Advertisement

டெல்டாவில் பா.ஜ., வளர்ச்சி: கலக்கத்தில் கம்யூ., - தி.மு.க.,

Tamil News
ADVERTISEMENT
சென்னை : டெல்டா மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும், ரஜினி ரசிகர்களும் பா.ஜ.,வில் இணைந்து வருவது, தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்கள், கம்யூனிஸ்ட், மற்றும் தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. தமிழகம் முழுதும் பெரும் வெற்றிகளை குவித்த அ.தி.மு.க., மற்றும் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வன்னியர்களின் ஓட்டுகளை அள்ளிய பா.ம.க.,வால் கூட, இந்த மாவட்டங்களில் பெரிய அளவில் வெற்றிகளை பெற முடியவில்லை.

இதற்குக் காரணம், கம்யூனிஸ்ட், தி.மு.க.,வுக்கு அடிமட்ட அளவில் இருந்த செல்வாக்கு. ஆனால், சமீப காலமாக, கம்யூனிஸ்ட், திராவிட கோட்டையில் ஓட்டை விழ துவங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் முஸ்லிம் கட்சிகளின் வளர்ச்சியால், அதற்கு எதிர்வினையாக பா.ஜ., வளர துவங்கியுள்ளது.

பா.ம.க., துணைப் பொதுச்செயலராக இருந்த அகோரம் போன்றவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.,வில் இணைந்தனர்.மத்திய பா.ஜ., அரசின் எட்டாண்டு நிறைவை ஒட்டி, மாவட்ட வாரியாக சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில், மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றபோது, தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி கணேசன் தலைமையில், நூற்றுக்கணக்கானோர், பா.ஜ.,வில் இணைந்தனர்.

நீடாமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலர் சதா சதீஷ் தலைமையில், அக்கட்சியின் இரண்டு ஒன்றியச் செயலர்கள் உள்ளிட்ட 300 பேர், அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.Latest Tamil News
சில மாதங்களுக்கு முன்பு, நாகை கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி., முருகையனின் மகன் ரமேஷ், பா.ஜ.,வில் இணைந்தார். தற்போதைய திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தற்போதைய நாகை எம்.பி., செல்வராஜின் அக்கா மகன்.ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த கோட்டூர் ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலராக பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, கம்யூனிஸ்ட் ஊழியர் பாலனின் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார். இவர், கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ஒருவரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி கம்யூனிஸ்ட், தி.மு.க., மற்றும் பா.ம.க.,வில் இருந்தும் பா.ஜ.,வில் இணைவது அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கம் போல, டெல்டா மாவட்டங்கள் மாறி வருவதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக இருந்த தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கையை, பிரதமர் மோடி தான் நிறைவேற்றினார். இதனால், டெல்டா மாவட்டங்களில் கணிசமாக உள்ள அந்த சமூகத்தினர், பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். இது தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (22)

  • Ramaraj P -

    2 சீட்டில் இருந்து 80 சீட்டுகள் வாங்கி உள்ளது. பா.ஜ.க மேற்கு வங்காளத்தில் இது அடுத்த தேர்தலில் அதிகமாக இருக்கும் அல்லது ஆட்சியில் அமரும்.

  • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

    அண்ணாமலை பதவி ஏற்பு என்னைக்குங்க

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    ஊழலின் உலக மஹா நாயகரின் கோட்டையில் ஓட்டை என்றும் போடலாம்

  • Jit Onet - New York,யூ.எஸ்.ஏ

    திமுக ஒரு தீயசக்தி. அதனால்தான் கொலை கொள்ளை லஞ்சம் சாராயம், இந்துக்கள் அவமதிப்பு, கோவில் பண ஊழல், திரைப்பட துறை கபளீகரம் எல்லாம் நடக்கின்றன. dismissDMK

  • P. SRINIVASALU - chennai,இந்தியா

    சும்மா காத்தடிக்கறாங்க. பிஜேபிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை.. எல்லாம் பொய் பிரச்சாரம்..

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்