ADVERTISEMENT
தி.மு.க.,வைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரை, வாய்க்கு வந்தபடி அநாகரிகமாக திட்டிய, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளரின் 'ஆடியோ' வேகமாக பரவி வருகிறது.
கோவைக்கு அருகேஉள்ள அரிசிபாளையம் கிராம பஞ்., தலைவராக இருப்பவர் கணேசன், 60. தி.மு.க.,வைச் சேர்ந்த இவரும், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியும் போனில் பேசியுள்ளனர்.அந்த உரையாடலின் ஆடியோ, கோவையில் தி.மு.க.,வினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
சேனாதிபதியை விட மிகவும் அதிக வயதுள்ள கணேசன், 'என்னண்ணா இப்பிடிப் பேசுறீங்க... வார்த்தையெல்லாம் விடாதீங்கண்ணா' என்று கெஞ்சுகிறார்.இதுகுறித்து, மருதமலை சேனாதிபதியிடம் கேட்டதற்கு, ''அது 100 சதவீதம் பொய்ங்க. நான் அப்பிடிப் பேசுறவன் இல்லீங்க. அது நான் பேசுனதே இல்லீங்க,'' என்று மறுத்தார்.
ஆனால், அரிசிபாளையம் கிராம பஞ்சாயத்துத் தலைவர் கணேசனிடம் கேட்டதற்கு, ''என்னுடன் பேசியது அவர் தான். அவர் தான் என்னை அழைத்தார். ''அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. தலைமைக்கும் இது குறித்து தெரிவித்து விட்டேன்,'' என்று உறுதியாக கூறியதுடன், அவர் ஏன் அப்படி பேசினார் என்ற தகவலையும் நம்மிடம் விளக்கினார்.இந்த ஆடியோ விவகாரம், கோவை தி.மு.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் -

அதில் பேசும் சேனாதிபதி, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பல முறை உபயோகித்து, அநாகரிகத்தின் உச்சமாக பேசுகிறார். இரண்டு முறை, 'மாவட்ட செயலர் பதவி என் முடிக்கு சமம்' என்று அசிங்கமாக கூறுகிறார்.அது மட்டுமின்றி, 'சின்ன வயசுல இருந்தே நான் இப்பிடித் தான் பேசுவேன்' என்று கூறிவிட்டு, மீண்டும் அநாகரிக வார்த்தைகளால் விளாசுகிறார்.
சேனாதிபதியை விட மிகவும் அதிக வயதுள்ள கணேசன், 'என்னண்ணா இப்பிடிப் பேசுறீங்க... வார்த்தையெல்லாம் விடாதீங்கண்ணா' என்று கெஞ்சுகிறார்.இதுகுறித்து, மருதமலை சேனாதிபதியிடம் கேட்டதற்கு, ''அது 100 சதவீதம் பொய்ங்க. நான் அப்பிடிப் பேசுறவன் இல்லீங்க. அது நான் பேசுனதே இல்லீங்க,'' என்று மறுத்தார்.
ஆனால், அரிசிபாளையம் கிராம பஞ்சாயத்துத் தலைவர் கணேசனிடம் கேட்டதற்கு, ''என்னுடன் பேசியது அவர் தான். அவர் தான் என்னை அழைத்தார். ''அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. தலைமைக்கும் இது குறித்து தெரிவித்து விட்டேன்,'' என்று உறுதியாக கூறியதுடன், அவர் ஏன் அப்படி பேசினார் என்ற தகவலையும் நம்மிடம் விளக்கினார்.இந்த ஆடியோ விவகாரம், கோவை தி.மு.க.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!