ADVERTISEMENT
புதுடில்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 3 நாட்கள் விசாரித்த நிலையில், நாளைய (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கோரியுள்ளார். 20 ம் தேதி ஆஜராக அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி., ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையே சோனியாவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதால், ராகுல் மட்டும் ஆஜரானார். அவரிடம் கடந்த 3 நாட்களாக பல மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளைய அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய் சோனியாவின் உடல்நிலையை கவனித்து வருவதால் அவகாசம் கோருவதாக தெரிவித்துள்ளார்.
20 ம் தேதி ஆஜராக அனுமதி அளிக்கும்படி ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, எம்.பி., ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையே சோனியாவுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதால், ராகுல் மட்டும் ஆஜரானார். அவரிடம் கடந்த 3 நாட்களாக பல மணிநேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

20 ம் தேதி ஆஜராக அனுமதி அளிக்கும்படி ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பப்புவிற்கு அம்மா பாசம் அதிகம். அமாவாவைப்பார்க்க இப்போது முடியாது என்று அவருக்கே நன்றாக தெரியும். தெரிந்தும் ஒரு ரீல் விட்டு பார்க்கலாமே என்றுதான் சபலம். அம்மாகிட்டே நெருங்கவே முடியாது இப்போ. பால் குடிக்கும் பிள்ளைக்கு அம்மா பாசம் பொங்கி வந்துவிட்டது.