Load Image
dinamalar telegram
Advertisement

மும்முனை மின்சாரம் வழங்க லஞ்சம் கேட்ட மின் ஊழியர் கைது

Tamil News
ADVERTISEMENT
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கருமிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு இலவச மும்முனை மின்சாரம் ஒதுக்கீடு ஆன நிலையில் அதற்கு ஒப்புதல் அட்டை வழங்க புழுதிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணி புரியும் செல்வராஜ் 2500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத கருப்பையா சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் லஞ்சம் வாங்கிய செல்வராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    "போலீசார் லஞ்சம் வாங்கிய செல்வராஜை கையும் களவுமாக கைது செய்தனர்." ....... அய்யய்யோ .... வன்கொடுமை ..... என்று கூவிக்கொண்டு ஒரு கூட்டம் வருமே ????

  • BALU - HOSUR,இந்தியா

    லஞ்சம் கொடுக்காத அந்த வீரத் தமிழன் கருப்பையாவை வணங்கி வாழ்த்துகிறோம்.இதனால் அந்தக் கிளை அலுகத்திலாவது ஒரு மூன்று மாதத்திற்காவது லஞ்ச லாவண்யம் இருக்காது.நன்றி.

  • Visu - chennai,இந்தியா

    என்ன பிரயோஜனம் பணிநீக்கம் செய்தால் பரவாயில்ல அடுத்த மாதம் வேறு ஊரில் வேறொருவரிடம் லஞ்சம் வாங்க போறார்

  • vadivelu - thenkaasi,இந்தியா

    பாவம் 2500 ரூ லஞ்சம் வாங்கியவருக்காக ஜோதி மணிகள் உருண்டு போராட மாட்டார்கள்.

Advertisement