வரும் 23ம் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு நடக்க உள்ள நிலையில், அக்கட்சியில் ஒற்றை தலைமை என்ற விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஜெயக்குமாரை தாக்க முயற்சி ?
ஜெயக்குமார் கிளம்பி சென்ற போது, அவரது காரை கையாள் தாக்கிய பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், கட்சியின் தலைமை அலுவலகம் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, அ.தி.மு.க., தொண்டர்கள் நினைத்தது நடக்கும் என்றார்.
அலுவலகம் வந்த பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், பொன்னையன், வைகைசெல்வன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, வைத்தியலிங்கம், உதயக்குமார், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து (18)
OPS EPS இரண்டு பேர் அதிமுக பிளவு படுவதற்குக் காரணம் அதிலும் பதவி வெறிபிடித்த எடப்பாடி என்றால் மிகையாகாது. பிஜேபியில் மோடி அமிக்ஷா என இரண்டு பேர், இவர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் மோடி அமிக்ஷாவை பார்த்துக்கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் நாட்டை யார் ஆளவேண்டும். திமுக அல்லது அதிமுக தான் ஆளவேண்டும்
இவர் ஜெயிக்க மாட்டார். கட்சி உடையும். அதிமுக அழியும் . இது தான் முதல்வர் கனவு.
" (தொ) குண்டர்கள் நினைப்பதுதான் நடக்கும் " இது தான் சரியான தலைப்பு
காமராஜர் ரொம்ப நல்லவர். அவர் பேரை சொல்லி அவர் படத்தை போட்டு வோட்டுக்கேட்டு பார்க்கிறார்கள் காங்கிரெஸ்க்காரர்கள் . ஆனால் வோட்டு விழமாட்டேங்குது. எம்.ஜி ஆர் படம் போட்டு வோட்டு கேட்டார்கள். ஜெயலலிதா பேசியதை வீதிவீதியாக மைக் செட் போட்டு அலற விட்டார்கள். ஆனாலும் ஜெயிக்கவில்லை. வோட்டு போடும் போது மறைந்த தலைவர்களை பற்றி சாதாரண அடித்தட்டு மக்கள் மற்றும் இளைஞர்கள் இப்போது யோசிப்பதில்லை. யோசிக்க நேரம் இல்லை. அப்படியே யோசித்தாலும் இனிமேல் அவர்களால் என்ன நமக்கு கிடைக்கும் என்றும் ஆராய்கிறார்கள். இருப்பவர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்றுமட்டும் நினைக்கிறார்கள். அதுவே வோட்டுக்கணக்கை மாற்றுகிறது. இதை ஆண்ட கட்சிகளும் ஆண்டுகொண்டிருக்கும் கட்சிகளும் இனிமேல் ஆள நினைக்கும் கட்சிகளும் மனதில் நிலை நிறுத்த வேண்டும். பழங்கதை பேசுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பொழுது போக வேண்டும் என்றால் பேசலாம். வாங்கிய காசுக்கு மீடியா முன்னால் , மேடை போட்டு வாய் கிழியும் அளவுக்கு கத்தலாம். ஆனால் வோட்டு கிடைக்குமா என்று யோசித்து ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும். அதற்கு தெருமேடைகள் மட்டும் போதாது. வீடு வீடாக சென்று பேச வேண்டும். பேசினால் மட்டும் போதாது. பேசியதை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள். ஒரு கட்சியினரை மாற்று கட்சியினர் மேடை போட்டு திட்டினால் மட்டும் அந்த கட்சி வளர்ந்துவிட்டது என்று பொருள்கொள்ள முடியாது. கூட்டம் கூடுவதாலேயே ஆதரவு கிட்டி விட்டது என்றும் எண்ணலாகாது. மக்களோடு மக்களாக இரண்டற கலக்க வேண்டும். அவர்களுக்காக வீதியில் போராட வேண்டும். தோல்வி அடைந்த பிறகும் இதை அண்ணா தி மு க உணர்ந்ததாக தெரியவில்லை. பா ஜ க வும் உணரவேண்டும்.
முறையாக தேர்தல் நடத்தி ஒற்றைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.