சென்னை : கும்பகோணத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சுவாமி சிலைகள், அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

விசாரணையில் கோவிலில் இருந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது தெரிய வந்தது. கோவிலில் இருந்த சிலைகளின் புகைப்படங்களை பெற்று, 'பிரெஞ்ச் இன்ஸ்டியூட் ஆப் பாண்டிச்சேரி'யிடம் இருந்து பெற்ற புகைப்படங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என, இணையதளத்தில் ஆய்வு செய்ததில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில், 'சோமாஸ்கந்தர், தனி அம்மன்' சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அச்சிலைகளை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (27)
நான் சென்ற ஆண்டு அமெரிக்காவில் பாஸ்டன் அருகே WORCESTER பல்கலையின் மியூசியம் சென்றேன் அங்கு ஏராளமான சோழர் காலத்து கலைப் படைப்புகள் காட்சிக்கு வைத்து உள்ளார்கள். அது அனைத்துமே தமிழகத்தில் இருந்து சென்றதுதானே?
காணாமல் போனதுக்கு FIR இருக்கா என முதலில் கேளுங்க Sir. திருடன் கையில் சாவிய கொடுத்துவிட்டு அல்லாடுபவர்கள் நாங்கள்
திருட்டு ரயிலேறி வித்தவுட்டு டிக்கெட்டில் வந்த திருடன் கட்டுமரத்தின் வேலையாக இருக்கும்
நெனெச்சேன், ஒரு சில அரசியல்வாதிகள் அடிக்கடி உடம்பு சரியில்லை, வெளிநாடு செல்கிறேன் என்று சொல்லும் போதெல்லாம், இப்படி நமது நாட்டு ஹிந்து கோவில் சிலைகள் மாயமா மறைந்துபோகுதே என்று. இப்ப புரிந்துவிட்டது, அவர்கள் எந்த விஷயத்துக்காக வெளிநாடு பயணம் செல்கிறார்கள் என்று. உடனே என் கருத்தை படித்துவிட்டு, ஒருசில அல்லக்கைகள், மோடி கூட செல்கிறார் என்று கூற வாய்ப்புண்டு. அவர் செல்வதாதால்தான் இப்படி மீட்கப்படுகிறது என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன் அந்த அல்லக்கைகளுக்கு.
இதனால் அறுபது வருட வருமானம் போய் விட்டதே எனபததால் வருந்தும் ஒரு கும்பல். வேறொன்றும் இல்லை.