Load Image
dinamalar telegram
Advertisement

ஆசிரியர்கள் இல்லாததால் ஆயாக்களை வைத்து பாடம்


சென்னை: எல்.கே.ஜி., வகுப்புகளில் ஆசிரியர் இல்லாததால், அங்கன்வாடி ஆயாக்கள் வாயிலாக பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Latest Tamil News


மாநிலம் முழுதும், 2,381 அரசு தொடக்க பள்ளி வளாகங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மழலையர் வகுப்புகள் உள்ளன. அவற்றில், 59 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் நடப்பு கல்வி ஆண்டு முதல், எல்.கே.ஜி., வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது.
Latest Tamil News


இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.இதையடுத்து, எல்.கே.ஜி., வகுப்புகளை மூடும் முடிவை, தமிழக அரசு வாபஸ் பெற்றது. ஆனால், இந்த வகுப்பில் பாடம் எடுத்த, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், தனியார் பள்ளிகளில் சேர முடியாத பலர், அரசு பள்ளி எல்.கே.ஜி., வகுப்புகளில் சேர துவங்கி உள்ளனர்.


ஆனால், பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. அரசு அறிவித்தபடி சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வரை, அங்கன்வாடி ஆயாக்கள் மற்றும் அமைப்பாளர்களை வைத்து, பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (19)

  • raja - Cotonou,பெனின்

    இது என்ன பெரிது .... சும்மா உக்காரவைத்து விட்டு உதய், சபரீசன் போன்றவர்கள் ஆச்சியை நடக்கவில்லையா என்று கொத்தடிமைகள் கேட்கக்கூடும்.....

  • raja - Cotonou,பெனின்

    சோறு சமைக்கிறா ஆயா சொல்லிக் கொடுக்கும் நிலைமையில் இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட விடியாத அரசின் லட்சணம்ம்ம் ...

  • skanda kumar - bangalore,இந்தியா

    Tasmac Tamil Nadu great. Visual arasu dravida model great.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இதிலும் பற்றாக்குறை இருந்தால் சத்துணவு கூட ஆயாக்களை பாடம் எடுக்க சொல்லலாம்.

  • ஆரூர் ரங் -

    அந்தந்த சிற்றூரில் உள்ள பட்டதாரிகளுக்கு குறுகிய காலப் பயிற்சியளித்து அங்கன்வாடிகளில் தாற்காலிகமாக பாடம் நடத்த வைக்கலாம். அங்கன்வாடிகள் 🤫படிக்காத பெண்களுக்கு (வெட்டி) வேலைவாய்ப்பு தருகின்ற விடுதிகளல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்