Load Image
dinamalar telegram
Advertisement

கோவிலில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை: உயர்நீதிமன்ற கிளை

Tamil News
ADVERTISEMENT
மதுரை: கோவில்களில் கடவுளுக்கு மட்டுமே முதல் மரியாதை, மனிதர்களுக்கு அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என சேதுபதி என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


இதனை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார் கூறியதாவது: ஜாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கோவிலில், முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே. மனிதர்களுக்கு அல்ல. கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Latest Tamil News


வாசகர் கருத்து (33)

  • அப்புசாமி -

    ....

  • அப்புசாமி -

    ,,,,

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கோவில்களில் ஓதுவார், திருவாய் மொழி , வேத கோஷ்டி என்று உள்ளவர்களுக்கு பரம்பரை முறையில் முதல் மரியாதை உள்ளது. ஆனால் இன்று உள்ளூர் கவுன்சிலர் தனக்கு முதல் மரியாதை தரவில்லை என்று அர்ச்சக்கரைப் பணிநீக்கம் செய்யுமளவு உள்ளது நிலை. அத்தி வரதர் தரிசனத்தில் நயன் தாரா, விக்னேஷ் சிவன் சென்றால் அவர்களுக்கு பட்டர்கள் ஓடி ஓடி மாலை மரியாதை செய்கின்றனர் கோயில் நிர்வாகம், அர்ச்சகர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் நிலையில் இறங்காமல் இருந்தால், இந்த முதல் மரியாதை பிரசனையே எழாது

  • ஆரூர் ரங் -

    மடத் தலைவர்கள், ஆதீனங்கள் மற்றும் துறவிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகம மரபு🤒 முற்காலத்தில் ஸ்வாமிக்கு கும்ப ஆரத்தி காண்பிக்கும் உரிமை தேவரடியார்களுக்கு கொடுக்கபட்டிருந்தது.🤔 தேவையில்லாமல் மத விஷயங்களில் கோர்ட் தலையிடுவது சரியல்ல. ( நீதிமன்றங்களில் திராவிட ஊடுருவலோ? )

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    கோயிலுக்கு போவது சாமி கும்பிடத்தான். அந்த சாமிக்கு மட்டும்தான் முதல் மரியாதையும் கடைசி மரியாதையும். மற்ற எதற்குக்குமில்லை. எல்லோரும் கடைப் பிடித்தால் நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்