Load Image
dinamalar telegram
Advertisement

ஒற்றை தலைமை விவகாரம்: ‛‛ரெட்டை தலைவர்கள் ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
Latest Tamil News
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல், ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை, அ.தி.மு.க.,வில் வெடிக்கத் துவங்கி உள்ளது. சென்னையில் நேற்று நான்கரை மணி நேரம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒற்றைத் தலைமைக்கு பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த ஒற்றைத் தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும் என்றும், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அடிக்கோடிட்டு காட்டினார். இதனை தொடர்ந்து நேற்று பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும்(ஜூன் 15) இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.Latest Tamil News
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில், பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அதில், எம்.எல்.ஏ., வைத்திலிங்கம், நெல்லை மற்றும் தேனி மாவட்ட செயலாளர், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Latest Tamil Newsஅதேபோல், பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பழனிசாமியை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர், பின்னர் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசினர்.

போஸ்டர் யுத்தம்



இதனிடையே, பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில், சிலர் பன்னீர்செல்வத்தை பதவியேற்கவும், மற்றவர்கள் பழனிசாமியை பதவியேற்கவும் வலியுறுத்தி அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னையில் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் அதிகளவு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் பகுதிகளில், அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

சாலை மறியல்



சென்னையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவரது ஆதரவாளர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



வாசகர் கருத்து (21)

  • sankaseshan - mumbai,இந்தியா

    ஒற்றை தலைமை இரட்டை தலைவலி

  • Suppan - Mumbai,இந்தியா

    முதல் நாள் பழனிச்சாமி அடுத்த நாள் பன்னீர். பிரச்சினையே இருக்காது.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    பழனி தான் சரியான தேர்வு.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    இரட்டை இலை ஒரு தலைதான் சிறந்தது. இரட்டை தலை ஒரு இலை எப்போதுமே ஆபத்தானது

  • Kadaparai Mani - chennai,இந்தியா

    எடப்பாடி மீது தொண்டர்களுக்கு பிடித்து உள்ளது .அவர் தலைவர் ஆவது காலத்தின் கட்டாயம் .அடுத்த ஆட்சி அதிமுகத்தான் .எடப்பாடி அடுத்த முதல்வர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement