Load Image
dinamalar telegram
Advertisement

கொட்டித் தீர்த்த கன மழை; வெள்ளத்தில் மிதந்தது ஊட்டி

Tamil News
ADVERTISEMENT

ஊட்டி : ஊட்டியில் நேற்று இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கன மழையால், மார்க்கெட், தாவரவியல் பூங்கா சாலையில் வெள்ளம் சூழ்ந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரில் சில நாட்களாக மதிய வேளையில் தொடர் மழை பெய்கிறது. நேற்று மதியம் இரண்டு மணி நேரம் கொட்டித்தீர்த்த கன மழையால், ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, சேரிங்கிராஸ், நகராட்சி மார்க்கெட் வளாகம், பஸ் ஸ்டாண்ட், படகு இல்லம் சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


இதனால், வாகனங்கள் தடுமாறின. ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் சூழ்ந்த மழை நீரால், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள், கடை வியாபாரிகள் என அனைவரும் அவதிப்பட்டனர்.மக்கள் கூறுகையில், 'நகரில் உள்ள வடிகால்களை கோடை சீசனுக்காக துார் வாரினாலும், தொடர் மழையால் அவற்றில் சகதி, கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.'மழை வெள்ளம் தேங்கும் இடங்களில் வடிகால் அமைப்புகளில் துார் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement