Load Image
dinamalar telegram
Advertisement

" துள்ளி வரும் பிள்ளைகள் " - ஸ்டாலின் வாழ்த்து


சென்னை: கோடை விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
முதல் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஒரு மாத லீவு முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
Latest Tamil News

கோவிட் தடுப்பு நெறிமுறைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன .
இன்று ஆர்வமாக குழந்தைகள் பள்ளி கிளம்புவதை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Latest Tamil News

அறிவு ஒளி வீசட்டும்



இந்த வாழ்த்து செய்தியில் ;

நீண்ட இடைவெளிக்கு பின் பிள்ளைகள் பள்ளி நோக்கி வருகின்றனர், கனிவுடன் அன்போடு வரவேற்று பாடங்கள் கற்பிக்குமாறு ஆசிரிய பெருமக்களை கேட்டு கொள்கிறேன்.
துள்ளி வரும் பிள்ளை செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கோவிட் என்னும் பெரும் தொற்றால் கல்வி தடைப்பட்டது. இருப்பினும் ஆன்லைனில் பாடம் கற்றீர்கள். இருந்தாலும் பள்ளிகளில் அமர்ந்து கற்கும் அநுபவத்திற்கு ஈடு இணையில்லை. இடையில் தடைபட்ட வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள். கல்விசாலையில் அறிவு ஒளி வீசட்டும். மாநிலம் வளர்ச்சி பெறட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூக்கள், இனிப்பு வழங்கி வரவேற்றனர்.



வாசகர் கருத்து (8)

  • Thangarajan Kanagaraman -

    வருடாவருடம் துள்ளிக்குதித்து தானே குழந்தைகள் பள்ளிக்கு சென்றன?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பள்ளிக்குழந்தைகளை வரவேட்கும் இதேநேரத்தில், முதல்வர் அவர்கள் எல்லா பள்ளி நிர்வாகத்திற்கும் ஒரு கட்டளை இடவேண்டும். அதாவது, வொவொரு பள்ளி நிர்வாகமும், பிள்ளைகளுக்கு தேவையான குடிநீர், சிறந்த பள்ளி கட்டிடங்கள், போதிய கழிவு இடங்கள், சுகாதாரமான பள்ளி சுற்றுப்புறம், குறிப்பாக டாஸ்மாக் கடைகள் பள்ளிக்கூடங்கள் அருகிலேயே இருக்கக்கூடாது, என்று ஒரு 'கட்டளையை' முதல்வர் அவர்கள் இடவேண்டும்.

  • Balaji - Chennai,இந்தியா

    ஹய்யோ ஹய்யோ...

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

    tool kit

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கல்வி மந்திரி வேலையை இவர் செய்வதால் கல்வி மந்திரிக்கு அடுத்த கல்தா போல் தெரிகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement