Load Image
dinamalar telegram
Advertisement

விசாரணை கைதி மரணம்; ஆய்வாளர் உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest Tamil News
ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Latest Tamil News

5 பேர்சஸ்பெண்ட்



இந்நிலையில் கைதி ராஜசேகரை விசாரித்த ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் கன்னியப்பன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (9)

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    விடியல் ஆட்சியில் இது எத்தனையாவது லாக்கப் சாவு. வெட்கம் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்கா என்று எப்பிடி விடியல் அரசால் தம்பட்டம் அடிக்க முடிகிறது. உங்கள் உணவில் உப்பு இருக்கிறதா. விடியலின் ஏவல்துறை கைகட்டி நிற்கிறது

  • theruvasagan -

    சாத்தான் குளத்துல நடந்ததுக்கு என்னா ஆர்பாட்டம். இப்ப வாரத்துக்கு ஒண்ணு. ஆனா முன்னாள் ஆளுங்கட்சிக்கு தட்டிக் கேக்க துப்பில்லை.

  • duruvasar - indraprastham,இந்தியா

    பூங்கா அமைதியாக இருந்தாலும் எறும்புகள் ஓடிக்கொண்டுத்தான் இருக்கும். ஸ்டாலின் எவ்வளவு தடவை சொல்லிட்டாரு இது பெரியார் மண், தமிழகம் அமைதி பூங்கா என்று.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    சஸ்பெண்ட் ஒரு கண்துடைப்பு நாடகம். கொலைக்குற்றம் சாட்ட வேண்டும். விசாரணையை பதிவு செய்திருந்தால் அதை கைப்பற்றி சிபிஐ விசாரிக்க வழி செய்ய வேண்டும்.

  • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

    இருபது சதவிகிதம் அளவு , சுயநல மிருகங்கள் , மனிதனை மதிக்காத காட்டு வாசிகள், பணப் பெயிகள் , அரசியல் , மத , ஜாதி மிருகங்கள் இந்த நிலையங்களில் இருப்பதால் , இருக்கும் மிச்சம் என்பது சதவிகித ஓரளவு மனிதாபிமான காவலர்களுக்கும் கேட்ட பெயர்

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்