Load Image
dinamalar telegram
Advertisement

ராஜஸ்தான் அமைச்சர் மகன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் மீது மை வீச்சு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: ராஜஸ்தான் மாநில அமைச்சர் மகன் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் மீது மை வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி மீது, பெண் ஒருவர் டில்லி போலீசில் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய டில்லி போலீசார் ராஜஸ்தான் சென்றனர். ஆனால், ரோகித் ஜோஷி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லி நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்கியது. இதனையடுத்து நேற்று அவர் டில்லி போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண், டில்லியில் கலிந்த் குஜ் சாலையில் தாயாருடன் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் ஊதா இங்க் போன்ற திரவத்தை அவர் மீது வீசிவிட்டு தப்பி சென்றனர். தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி சென்ற குற்றவாளிகளை சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகின்றனர்.Latest Tamil News
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (7)

  • பேசும் தமிழன் -

    பப்பு, கனி அக்கா மற்றும் மணி அக்கா.... எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.... கூடவே மெழுகுவர்த்தி கொண்டு வரவும்...

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்னும் அலகு பரவ வில்லையை போனால் தேரிலிறது.தெரிந்திருந்தால் மை வீசி இருக்க மாட்டார்கள். ஆசிட் வீசி இருப்பார்கள்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    மக்களே இவர்களுக்கு தண்டனை கொடுக்கும் காலம் வந்து விடும் சட்டம் தூங்கி கொண்டிருந்தால்

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    இந்த விஷயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்னு போலத்தான் .......

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தவறு செய்யும் எந்த அரசியல்வாதியும், அவர்களது சொந்தங்களும் இந்தியாவில் பொதுவாக தண்டனை பெற்றதில்லை. இப்படியும் சட்டம் செயல்படுமா? செயல்படும், இந்தியாவில்... வெட்கம் வேதனை நேற்றுகூட பாருங்கள், பெங்களூருவில் ஒரு ஆளும்கட்சியின் பிரமுகர் ஒருவரின் மகள், போக்குவரத்து விதிகளை மீறி, போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். அதே தவறை ஒரு சாமானியன் செய்திருந்தால் அவன்/அவள் கடுமையாக தண்டனை அனுபவித்திருப்பார்கள். இந்தியாவில், "சட்டம் ஒரு இருட்டறை". வெட்கம் வேதனை

Advertisement