Load Image
Advertisement

M.A.M.,க்கு மருத்துவ மாணவர் தேர்வு பட்டியல் கொடுத்து கட்சிக்கு பணம் கேட்போம்: ஆற்காடு வீராசாமி ஒப்புதல்: வீடியோ வைரல்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: மருத்துவ கவுன்சிலிங் பட்டியலை, கவுன்சிலிங் நடப்பதற்கு முன்னரே, தனியார் மருத்துவ கல்லூரி வைத்துள்ள எம்ஏஎம்.,மிடம் (M.A.M) பட்டியல் கொடுத்து விட்டு, கட்சிக்கு பணம் கேட்போம் எனவும், அவரும் ரூ.5 கோடி வரை பணம் கொடுப்பார் என தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கடந்த 2018 வருடம் செப்.,2 அன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டது. ஒரு முக்கியமான டிவி சேனலின் லோகோ அந்த வீடியோவில் இருக்கிறது.

அந்த வீடியோவில் ஆற்காடு வீராசாமி பேசியுள்ளதாவது: தேர்தல் வந்துவிட்டால் குறைந்தபட்சம் வேட்பாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் நேரத்தில் நிதி தேவை. அப்படி நிதி தேவைப்படும் நேரத்தில், பொருளாளராக இருக்கும் என்னை, நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என கருணாநிதி கூறுவார். நான், அதற்கான ஏற்பாடு செய்வேன். எப்படி செய்வேன் என்றால், எம்ஏஎம் (M.A.M) வீட்டிற்கு போவேன். எம்ஏஎம் என் மீது அன்பு உள்ளவர். அமைச்சராக இருந்த நேரத்தில் பல முறை எனது வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறார்.


Latest Tamil News

நான் சுகாதார அமைச்சராக இருந்த போது, நாங்கள் முதலில் பட்டியல் ஒன்றை வெளியிடுவோம். நாங்கள் வெளியிட்ட பட்டியல் நகல் வேண்டும் என்பார். ஏன்? என்று கேட்பேன். நாங்கள் தேர்வு செய்யும் போது, பட்டியலில் இருக்கிறவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்கள் எப்படியும் அரசு கல்லூரிக்கு போய்விடுவார்கள். அந்த இடங்களை எல்லாம் பிறகு நாங்கள் (M.A.M வைத்திருக்கும் கல்லூரி) நிரப்பிக்கொள்வோம். அதனால், அந்த பட்டியலின் நகல் வேண்டும் என்று கேட்பார். நான் கொடுத்து அனுப்புவேன். அவருடன் நிறைய தொடர்பு இருக்கும் காரணத்தால், அவருக்கு ஒரு கோடி, இரண்டு கோடி எல்லாம் ரொம்ப சாதாரணம். நான் வற்புறுத்தி கேட்டால் குறைந்தது 5 கோடி கொடுப்பார். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (113)

  • b. venugopal - tiruchi,இந்தியா

    அண்ணாமலை அறிக்கை விடுவது மட்டும்தான் ஊருவரையும் சரி பண்ண முடியாது

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    நுணலும் தன வாயால் கெடும் என்ற பழ மொழிக்கு ஏற்ப ஆர்க்காடு வீராசாமி லஞ்சம் வாங்கியதை உளறி விட்டார்

  • Tamilan - NA,இந்தியா

    மோடியைப்போல் நாட்டை மக்கள் பணத்தை கொள்ளையர்களுக்கு தாரைவார்த்துவிட்டு அவர்கள் அடிக்கும் லச்சக்கணக்கான கோடிகள் கொள்ளையில் சட்ட பூர்வமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொள்ளைபடிக்கும் உலகத்தரம் வாய்ந்த கொள்ளை நுட்பம் இவர்களுக்கு தெரியவில்லை. மோடி அரசு மாநில அரசுகளிடம், மற்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநில அரசுகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமா ?.

  • Umapathy - Madipakkam,இந்தியா

    மக்களே நீட் ன் அவசியமும் இவர்களின் எதிர்ப்பும் இப்பொழுது புரிந்திருக்கும் ...விடியல் ஆட்சியின் ஊழல் ....

  • Umapathy - Madipakkam,இந்தியா

    mak

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement