Load Image
Advertisement

ராணுவம், பொருளாதாரம் போல் ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம்: கவர்னர்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும் என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.


சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: மனிதர்களுக்கு மட்டுமின்றி, உலகில் வாழும் அனைத்து உயிர்னங்களுக்கும் வழிபாடு என்பது அவசியம். புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம் தான் நமதுநாட்டை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது.

Latest Tamil News
இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. நமது நாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போது நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. மற்ற நாடுகளைப் போல, நமது நாடு ராணுவவீரர்கள், அரசர்கள் மூலம் உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தில் வளர்ச்சியைப்போல ஆன்மிகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்.


இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்துவரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (35)

  • sankar - சென்னை,இந்தியா

    இந்த செய்தியை ஒரு பத்து வருஷத்துக்கு அப்படியே வச்சிருக்கலாம்.

  • Venkat - Mumbai,இந்தியா

    ,,,,

  • Venkat - Mumbai,இந்தியா

    சுயமரியாதை என்பது 0.001% கூட இல்லாத ஒரு மாமனிதர்... நம் மானம் போற்றும் தமிழ்மண்ணின் ஆளுநர்....

  • Venkat - Mumbai,இந்தியா

    ,,,,,

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    . ஹா ஹா ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up