Load Image
dinamalar telegram
Advertisement

விலங்குகளுக்கும் இனி கோவிட் தடுப்பூசி

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி :விலங்குகளுக்கு செலுத்தக்கூடிய, 'அனோகோவாக்ஸ்' என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானாவை சேர்ந்த இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது.

மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவுவதை, பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக, மனிதர்களுடன் மிக நெருக்கமாக பழகும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டன.
Latest Tamil News

ஆனால், விலங்குகள் உடலில் இந்த தொற்று, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. மிகவும் அரிதாகவே சில விலங்குகள் பாதிப்புக்கு ஆளாவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விலங்குகளுக்கு செலுத்தக்கூடிய, அனோகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானாவை சேர்ந்த இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி, 'டெல்டா, ஒமைக்ரான்' வகை தொற்றில் இருந்து, விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அப்ப விலங்குகளும் மாஸ்க் அணியவேண்டுமா? "தனி விலங்கு" இடைவெளி கடைபிடிக்க வேண்டுமா? அடிக்கடி சுத்தம் செய்துகொள்ளவேண்டுமா? எதை? கால்களை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்