சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றிடும் வகையில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, இரு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் இதில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது.
மேலும், அச்சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்யவும் அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (18)
ஓய்வு பெற்ற நீதிபதிங்க காட்டுல மழை. இளைஞர்களுக்கு வேலை வெட்டி கிடைக்குதோ இல்லியோ இவிங்க பொழப்பு நல்லா ஓடுது. அதுசரி, இப்போது இருக்கிற நீரிபதிங்களுக்கே ஆன்லைன் சமாச்சாரங்கள் சரியாத் தெரியாது. ரிடையரானவருக்கு எல்லாம் தெரியுமா?
Will become a futile exercise. Can't be prevented under our constitution. The ex judge heading the committee is himself not competent or legal eagle and a one sided man. Further state has no authority to block such online sites. Opposite side, if such a law is passed will equate rummy with TASMAC. Playing rummy, they will argue as a s game. The only way is to introduce a special online gateway with special card linking to AADHAR authorization with some very minimum amount per month per person.
வேண்டியவர்களுக்கு வேண்டியது செய்ய ஒரு குழுவி ஏன் ஆன்லைன் ரம்மியால் பாதிப்பு என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும்
குழு என்றால் ஒரு பத்து பேருக்கு வேலை , அதற்கான பணம் அவர்களுக்கு ஊதியமாக கிடைக்கும். சரி குழு என்ன சொல்லும்? எதை ஆராய போகிறது.? இந்த சூதாட்டதால் நன்மையா? தீமையா? எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள்? எத்தனை பேர் வேண்டாம் என்கிறார்கள் என கணக்கு எடுக்க போகிறார்களா? குழு முடிவான அறிக்கை தர ஒரு இரண்டு வருடம்( நீட்டிப்பு செய்வோமே) , அரசு அதை ஏற்கலாமா என யோசனை செய்ய ஒரு வருடம், சட்ட வரைவு தேவையா? கவர்னர் ஒப்புதல் தேவை என அந்த சட்ட வரைவை கொண்டு வந்து அவர்.கால தாமதம் ஆக்கினால் அதன் மூலம் ஒரு வருடம். அவ்வளவு தான் இவர்களின் ஆட்சி காலம் முடிந்து விடும். அது வரை அந்த நிறுவனங்களிடம் பயம் காட்டியே பணவசூல் நடக்கும். அதற்கு தான் குழுவே?
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
குழுவின் அறிக்கை வரும் வரை ஆன்லைன் ரம்மி தடைன்னா நம்பலாம்.இவிங்க மாடலே தடை செய்யும் நோக்கம் எதுவும் இல்லாத மாதிரி இருக்கு. விடியா மூஞ்சி மாடல். அதுக்கு நீதிபதியின் பேரை போட்டு காவல்.