Load Image
dinamalar telegram
Advertisement

போதையில் தண்டவாளத்தில் தலைவைத்து துாக்கம்: ரயில் மோதி தலை துண்டான பரிதாபம்

Tamil News
ADVERTISEMENT

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.


தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் மாரிமுத்து (20). திரு.வி.க நகரை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் மகன் சு.மாரிமுத்து (23). நெல்லை மாவட்டம் பணகுடி சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங் (23). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். கூலி வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று (ஜூன் 09) இரவு 3 பேரும் தங்களது நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகமானதால் மூவரும் தண்டவாளத்தில் தலை வைத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

Latest Tamil News
இன்று அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்ற ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாரிமுத்து மற்றும் மற்றொரு மாரிமுத்து கழுத்தில் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தண்டவாளத்தின் அருகில் தூங்கியதால் ஜெபசிங் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து தென்பாகம் போலீஸ் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஜெபசிங் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


வாசகர் கருத்து (25)

  • jayvee - chennai,இந்தியா

    போதையில் உயிரோடு இருந்த தமிழர்களை ரயில் ஏற்றி கொன்ற ஒன்றிய அரசின் ரயில்வே துறையை கண்டித்து போராட்டம் .. கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆதரவு

  • N.K - Hamburg,ஜெர்மனி

    இதுதான் சரக்கு ரயில் என்பதா

  • N.K - Hamburg,ஜெர்மனி

    இருவது இருபத்தி மூன்று வயதில் இதெல்லாம் தேவையா ?

  • Soumya - Trichy,இந்தியா

    டாஸ்மாக் மொதலாளி டுபாக்கூர் விடியல் கப்ஸிப்

  • மதுமிதா - ,

    தவறறுபஃதைமீது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்