Load Image
dinamalar telegram
Advertisement

லோக்சபா இடைத்தேர்தல்: பா.ஜ.,வுக்கு காங்., தலைவர் ஆதரவு

Tamil News
ADVERTISEMENT
லக்னோ: உ.பி.,யில் உள்ள ராம்பூர் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக, முன்னாள் அமைச்சரும், காங்கிரசை சேர்ந்தவருமான நவாப் காசிம் அலி கான் கூறியுள்ளார். இதற்காக, காங்., பொது செயலாளர் பிரியங்காவிடம் மன்னிப்பு கோரினார்.

உ.பி.,யில் தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றவரும், மாயாவதி ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் நவாப் காசிம் அலிகான். தற்போது காங்கிரசில் இருக்கும் இவர், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் அசம்கானிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த அசம்கான், அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அங்கு வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், பா.ஜ., சார்பில் கன்ஷியாம் சிங் லோதி களமிறங்கி உள்ளார்.
Latest Tamil Newsஇந்நிலையில், காங்., பொதுச்செயலாளர் பிரியங்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் நவாப் காசிம் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என விரும்பினேன். ஆனால், சிலர் கட்சி மேலிடத்தை தவறாக வழிநடத்தி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவெடுக்க வைத்துவிட்டனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன். எதிர்காலத்திலும் நீடிப்பேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கட்சிக்கு சாதகமான சூழ்நிலை இல்லாத நேரத்திலும், கட்சி சார்பில் நான் போட்டியிட்டேன். யாருக்கேனும் ஆதரவு அளிக்கவும், ஓட்டு போடவும் எனக்கு சுதந்திரம் உள்ளது. தேர்தல் களத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாததால், நான் பா.ஜ.,விற்கு ஆதரவு அளிப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

சமீபத்தில், நவாப் காசிம் அலிகானை, பாஜ., வேட்பாளர் சந்தித்து ஆதரவு கோரினார். இதனையடுத்து, அவரை ஆதரிக்க, அவர் முன்வந்துள்ளார். ராம்பூர் மாவட்டத்தில், கடந்த 40 ஆண்டுகளாக அசம்கானும், நவாப் காசிம் அலி கானும் எதிரும் புதிரும் உள்ளனர். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின் போதும் இருவரும் எதிர்த்து களமிறங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • SUBBU,MADURAI -

    இதுவரை காங்கிரஸுக்கு ஏற்பட்ட ஏகப்பட்ட அவமானங்களில் உட்ச பட்ச தரமான அவமானம் இதுதான்.பாவம் காங்கிரஸின் நிலைமை இந்தளவிற்கா மோசமா போகணும்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ரெண்டு பாயிக்கும் ஒத்து போக வில்லை. காங்கரஸ் மேல் கோபம். .தன வெளிப்பாடு.காங்கரஸ் தலைமையை கண்டிக்கும் நிலையில் இல்லை.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    வாழ்துக்கள் . இங்கு ஜாதி மத மொழி வெறி இல்லாத கட்சிகள் வேண்டும், மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கரியார்கள் இந்த சமூக விரோதிகள் பிளவு படுத்தி நாட்டையே சீரழிக்கிறார்கள் , ஆகவே இந்த சமூக விரோதிகளுக்கு இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக நாம் இருந்தால் நல்லது, வந்தே மாதரம்

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    அடடா அப்புறம் , காக்கா எதுக்கோ கறையுதே . சே அவ்வளவுதானே, ஏதாவது ஒரு பதவி சுகம் வேணும் , அவ்வளவுதானே, அதற்குத்தான் ஆசைப்படுகிறாய் அலிகாநே .கொஞ்சம் வெயிட் பண்ணனும் .அவ்வளவுதான்.

  • Aanmeega Kaavi Sangar Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்