Load Image
dinamalar telegram
Advertisement

பெண்கள் கிரிக்கெட்: சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார் மித்தாலிராஜ்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மித்தாலிராஜ் தனது 39 வயதில் அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 23 ஆண்டுகள் விளையாடிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்னும் சாதனைக்கு உரியவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போது அனைத்து வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Latest Tamil News‛பல ஆண்டுகளாக தனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி' என தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட மித்தாலி ராஜ், இதுவரை 232 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7,805 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் இவர் வசமே உள்ளது. அதேபோல் 12 டெஸ்ட் போட்டிகளில் 699 ரன்களும், 89 டுவென்டி-20 போட்டிகளில் 2,364 ரன்களும் எடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (6)

  • SUBBU,MADURAI -

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ்பெண்ணான,அழகான, லெட்சணமான கேப்டன் Mithali Durai Raj.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    சாதித்தவற்றுக்கு வாழ்த்துக்கள் ..........

  • sethusubramaniam - chennai,இந்தியா

    உங்கள் ஒய்வு வாழ்க்கை ஆரோக்கியமாக , அமைதியாக அமைய வாழ்த்துக்கள் சாதனையாளரே

  • Mohan - Salem,இந்தியா

    மூன்று/நான்கு ஆண்டுகளாக சக கிரிக்கெட் வீராங்கனைகள் மித்தாலிக்கு ஒத்துழைப்பு தராமல் டார்ச்சர் தருகின்றனர் அதுவும் ஹர்மந்த் சிங் கவுர், மந்தனா போன்ற வீராங்கனைகளின் கடுமையான ஒத்துழையாமை ..பாவம் மிதாலி ராஜ்... ஆனால் கெட்ட நேரம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு ???

  • Girija - Chennai,இந்தியா

    மெரி கொம் மிதாலி க்கு கபில் மற்றும் சச்சின் ஆதரவாக குரல் கொடுத்ததால் மீண்டுவந்தனர், அந்த அளவிற்கு பயிற்சியாளர்கள் அராஜகம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement