சென்னை: வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை எனவும், ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:
வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் பணிகள் முடிந்தவுடன் ஒற்றை சாளர முறை மூலமே அனைத்திற்கும் அனுமதி வழங்கப்படும். வீட்டு வசதித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை. ஒற்றை சாளர முறையை முழுமையாக கொண்டுவர ஓராண்டுகாலம் ஆகியுள்ளது.
10ம் தேதி முதல் ஆன்லைனில் கட்டட அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரிகளே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் ஜி ஸ்கொயர் விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை.112 ஏக்கரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு அனைத்து அனுமதிகளும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டவை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வாசகர் கருத்து (29)
குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் தமிழா இதுவே நடைமுறை ஆதாரம் இருந்தால் அமைச்சர் சொல்லட்டுமே
அன்று என்னுடைய நெருங்கிய நண்பர் பூச்சி முருகன் , வாழ்க வளமுடன் வந்தே மாதரம்
அது என்ன ஸ்கொயர் ஆ ஜி ஸ்கொயர் , உங்களுக்கும் அந்த ஜி க்கும் அந்த 2 ஜி க்கும் என்ன பொருத்தமோ ? ஏழாம் பொருத்தமோ ? கோர்ட் கேஸ் ஆனாலும் தகத்தாயா கள்வர்கள் விடுதலை செய்யும் அளவிற்கு புரை யூரி உள்ளது .
"அடுக்குமாடி கட்டடத்திற்கு அமைச்சர் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரிகளே முடிவு செய்து அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது." ......... பார்த்து அமீச்சரே ..... அதிகாரிங்க மட்டும் சாப்டர போறாங்க ......
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அந்த கேள்விகளுக்கு இது பதில் இல்லையே...😂😂😂😂