சென்னை: கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகம் முழுவதும் ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.,க்கள் போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கந்துவட்டி பிரச்னைகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‛‛கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்று காகிதங்கள், சட்டவிரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும்'' என அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (25)
போலீஸ் துறையினரே கந்துவட்டி வியாபாரம் செய்கிறார்கள் ...போலீஸ் ஸ்டேஷன்களில் நடக்கும் கட்ட பஞ்சாயத்துகள் , கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே நடக்கிறது ....அப்புறம் எப்படி கந்துவட்டியை ஒழிப்பது ....எல்லாம் சரி ..பத்து வட்டிக்கு கடன் வாங்கும் அளவுக்கு அப்படி என்ன உருப்படாத செலவு வேண்டிக்கிடக்கிறது ? பக்கத்து வீட்டுக்காரனை பார்த்து சூடு போட்டுக்கொண்டு கிணற்றில் குதிப்பது எவன் தவறு ? தனியார் பைனான்சியர்களை ஏன் அனுமதிக்கவேண்டும் ? பைனான்ஸ் செய்பவனுக்கு , பணம் எங்கிருந்து வந்தது ? என்ன கணக்கு ? கடன் , வட்டி வசூல் நிலுவை என்ன ? என்று எந்த போலீஸ்காரனாவது , அதிகாரியாவது , எந்த ஒரு கேசிலாவது பைநாஸ்காரர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறீர்களா ? நாலு பைநாஸ்காரனை நடுத்தெருவில் விட்டு வெளுத்தால் , எவனும் அநியாய வட்டி தொழிலுக்கு வரமாட்டான் ? போலீஸ் அவனுங்களை களையெடுக்க தயாரா ?
சிரிப்பு போலீசின் இன்றைய காமெடி டைம் இத்துடன் நிறைவடைகிறது.
வேலை செய்வது போல தெரிகிறது. திமுகவினரிடம் திட்டு வாங்காமல் இருக்க வேண்டும்.
கழக ஆட்கள் கந்து வண்டியில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுப்பீர்களா
அடுத்து என்ன சப்ஜெக்ட் கையில் எடுப்பார்னு பந்தயம் கட்டி விளையாடலாம்