Load Image
dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வை குறி வைக்கும் விஜய்! பீஸ்ட் வெளியீட்டின் பின்னணி என்ன?

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அரசியலில் காலடி வைத்துள்ள நடிகர் விஜய், தன் இயக்கத்தை மக்களிடையே சேர்க்கும் வகையில், சங்கக் கிளைகளை திறந்து, பெண்களுக்கு புடவை, பிளாஸ்டிக் குடம் வழங்கவும், அ.தி.மு.க., கொடிக்கம்பம் உள்ள இடங்களில் எல்லாம், விஜய் மக்கள் இயக்க கொடி பறக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

நடிகர் விஜய், உள்ளாட்சி தேர்தல் வாயிலாக, அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 22ம் தேதி, விஜய் பிறந்த நாள். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விஜய் மக்கள் இயக்க கிளைகளை அதிகளவு திறந்து, நலத் திட்ட உதவிகள் வாயிலாக, மக்களை கவர திட்டமிட்டுள்ளார். புதுச்சேரியை தொடர்ந்து, உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 70 விஜய் மக்கள் இயக்க கிளைகளை திறக்க திட்டமிட்டனர். முதல் கட்டமாக, நேற்று முன்தினம், 24 கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.இதில், விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, பொது மக்களுக்கு புடவைகள், பிளாஸ்டிக் குடங்கள், மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ், நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
Latest Tamil Newsமேலும், அ.தி.மு.க., கொடி கம்பம் உள்ள பகுதியில் எல்லாம், விஜய் மக்கள் இயக்க கொடி கம்பம் நடப்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலுக்குள் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழகம் முழுதும் பரப்பி, ஒரு கோடிக்கும் மேலானவர்களை மன்றத்தில் இணைக்கும்படி, நிர்வாகிகளுக்கு விஜய் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தை, உதயநிதியின் பட நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது. எதிர்பார்த்த அளவுக்கு படம் வெற்றி பெறாது என்பது தெரிந்தே, அப்படத்தை உதயநிதி நிறுவனம் வாங்கியது. அப்போது, அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு எதிராக களமிறங்கும் படி, விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அந்த நிபந்தனை ஏற்கப்பட்ட பின்னரே, 'பீஸ்ட்' படத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (33)

  • Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ

    அடுத்த வடிவேலு ரெடி...ஆட்டுக்கு மஞ்சள் குளிப்பாட்டி மாலை போடும் வைபவம். தகதகா சூரியன் ஒளியில்

  • Soumya - Trichy,இந்தியா

    ;;;;

  • ?????????? - thanks ,அருபா

    "சட்டி சுட்டதடா, கை விட்டதடா ". ஆனால் கை சுடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகின்றது.

  • chinnakaruppan - natham,இந்தியா

    நடிகர் விஜய் திமுகவின் கைக்கூலி என்பது நிரூபணம் ஆகிறது.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டை திமுகவும், விஜய் கட்சி போன்ற இயக்கங்களும் பங்கு போடுவது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர உதவும் ..........

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்