அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், அதிமுக ஆட்சியின்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கப்பட்டன. அங்கன்வாடிகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்தும் வகையில் இந்த வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‛அங்கன்வாடி மையங்களிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும். அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வந்த இந்த வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்,' எனக் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் நடத்தினால் அப்புறம் எப்பூடி தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அதிகம் சம்பாதிக்க முடியும், சம்பாதித்தால்தானே அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முடியும்? அதான் இழுத்து மூடுறாங்க.