தமிழகத்தில் கோவிட் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தல....பத்தல..... 9ம் வகுப்பு தேர்வெழுதாதவர்கள் நீட் தேர்விலும் வெற்றி பெற்றதாக அறிவிச்சு சமூக நீதி காக்கணும் ..... ஹிஹி....