அலையில் சிக்கிமாணவர் மாயம்
மெரினா : ஆந்திரா மாநிலம், சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்சரண், 21. இவர், பி.டெக்., இறுதியாண்டு படித்து வந்தார்.சென்னை, சேத்துப்பட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு, சாய் சரண் தன் குடும்பத்தோடு வந்தார். இதையடுத்து, நேற்று மதியம் தன் நண்பர்களோடு, மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்றார்.அங்கு, கடலில் இறங்கி, நண்பர்களோடு சாய்சரண் குளித்தார். அப்போது அலையில் சிக்கி சாய் சரண் மாயமானார்.தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார், நேற்று இரவு வரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!