Load Image
dinamalar telegram
Advertisement

ஒடிசாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு:

Tamil News
ADVERTISEMENT
புவனேஸ்வர் : ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தன் அமைச்சரவையை இன்று மாற்றியமைத்தார். 5 பெண்கள் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

ஒடிசாவில், வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சட்டசபை சபாநாயகர் சூர்ய நாராயண பட்ரோவும் தன் பதவியை ராஜினாமா செய்தார்.Latest Tamil News
இன்று புவனேஸ்வரில் நடந்த நிகழ்ச்சியில் 5 பெண்கள் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். 13 பேருக்கு கேபினட் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் பாணி



ஆந்திராவில் 2024-ல் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளைதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமைச்சரவை சமீபத்தில் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    இவரை மட்டும்தான் நல்லவரு. மூத்த அமைச்சர்கள் ஊழல் பேர்வழிகள். அதான் தூக்கிட்டாரு.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    😩😩

Advertisement