கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்களுக்கு புத்தாடை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து, கனிமொழி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
1300 பேருக்கு பொற்கிழி
பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை பாரிமுனையில் நடந்த விழாவில் திமுக மூத்த முன்னோடிகள் 1300 பேருக்கு பொற்கிழி மற்றும் புத்தாடைகளை ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் நடந்த விழாவில் மலர் கண்காட்சியை உதயநிதி எம்எல்ஏ திறந்து வைத்தார். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது.
வாசகர் கருத்து (21)
இறந்த ஒருத்தருக்கு இறந்த நாள் கொண்டாடலாம், பிறந்தநாள் கொண்டாடுவது என்ன வகையான பகுத்தறிவு? கோவிலில் சாமி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினால் மூடத்தனம். திருநீறு, குங்குமம் அணிந்தால் மூடத்தனம். பகுத்தறிவு பகலவனுக்கு மாலை அணிவித்து, பூ தூவினால் பகுத்தறிவு. கோவிலுக்கு போனால் மூடத்தனம், சமாதியில் மலர்வளையம் வைத்து தொட்டு கும்பிட்டால் பகுத்தறிவு. சமாதியில் தயிர்வடையும், முரசொலியும் வைத்தால் பகுத்தறிவு. என்னங்கடா உங்க பகுத்தறிவு? அந்த பாழாப்போன பகுத்தறிவில் தீயை வைக்க.
உலக மகா விஞ்ஞானியின் நாளாக ஐக்கிய சபை அறிவிக்க வேண்டும்
முத்தமிழ் வித்தவர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுவோம்.
என்னது தயிர் வடை இல்லாம கட்டுமரம் பிறந்தநாள் கொண்டாட்டமா...
அடுத்த நூராவது ஆண்டுக்கு காஷ்மீர் முதல் குமரி வரையிலும் டெல்லி முதல் காசி வரையிலும் குல்குட்டா முதல் சென்னப்ப நாயக்கர் பட்டினம் வரையிலும் சிலைகள் வைக்கவும் தோரணங்கள் கட்டவும் முடிவு செய்யவும். விடியல் ஆட்சி டெல்லி வரை விரிவு படுத்தி கழக தொண்டர்களிடம் நோட்டு புத்தகம் பேனா மற்றும் பிச்சை பாத்திரம் கொடுத்து இப்பொழுதே தனது தொழில்களை ஆரம்பிக்கச்சொல்லவும். ஈ நன்னாளில் வாரிசு அரசியல் இல்லை என்று சபதம் எடுத்து இன்பநி..யை வருங்கால தீயமுக இளைஞர் பாசரை தளபதியாக முடி சூட்டவும். முடிசூட்டு விழாவிற்கு துரை பாலு சிவா ராசாக்களை மற்றும் தீயமுக ஒன்றிய அடிமைகளை மாலைகளுடன் வந்து கழக வளர்ச்சிக்காக இன்பனின் கால் தொழுது பாத பூஜை செய்ய சொல்லவும்.