கடந்த 2004-ல் தி.மு.க., -- காங்., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி செல்வாக்குடன் வலம் வந்தார்.அடுத்து, 2009, 2014, 2019 லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம்பெற்ற கூட்டணி தோல்வி அடைந்ததால், அக்கட்சியால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற முடியவில்லை. இதனால், 2024 லோக்சபா தேர்தலில் குறைந்தது ஐந்து எம்.பி.,க்களை பெற்று, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று விட வேண்டும் என்ற இலக்குடன், பா.ம.க., தன் பணிகளை துவங்கியுள்ளது.

வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் உள்ள கிராமங்களில் இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வில் சேருவதை தடுக்க, பா.ம.க., நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இளைஞர்களை ஈர்க்கும் செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கண்டிப்புடன் ராமதாஸ் பேசியதாக, பா.ம.க.,வினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், பா.ம.க., தலைவராகியுள்ள அன்புமணி, ''தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, போலீஸ் தொப்பி அணிந்த மனநிலையிலேயே இன்னும் இருக்கிறார்,'' என, பா.ஜ.,வை விமர்சிக்க துவங்கியுள்ளார். அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க., அதிருப்தியில் இருக்கும் நிலையில், பா.ம.க.,வுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.
பா.ம.க., துணைப் பொதுச் செயலராக இருந்த அகோரம், இப்போது பா.ஜ.,வில் உள்ளார். சமீபத்தில் திருவாரூரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பெரும் கூட்டம் திரண்டதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஏற்கனவே, பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் பா.ஜ.,வில் இணைந்துள்ளனர். தற்போது வன்னியர் சங்க தலைவராக இருக்கும் அருள்மொழியின் சகோதரர் இளங்கோவன், 2004-ல் பா.ஜ.,வில் இணைந்த தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார்.கட்சியின் நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் அடுத்தடுத்து இணைந்து வருவது, பா.ம.க.,விற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -
இரு திராவிட கட்சிகளின் மீதும் மாரி மாரி சவாரி செய்து குடும்பத்தை மட்டும் முன்னிலைப்படுத்திய கட்சி நிறுவனரின் விரக்தி வெளிப்பாடு . இவற்றுட் கட்சியில் சேர்ந்த இளைஞர்களுக்கு இவர் என்ன செய்திருக்கிறார் ?